"காற்றில் கலந்த கல்பனா.." 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரம்! உலகிற்கே விழுந்த பேரிடி.. என்ன நடந்தது
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா, 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உயிரிழந்தார்.
டெல்லி: விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண் என்ற சிறப்பை பெற்ற கல்பனா சாவ்லா, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மரணமடைந்தார். அன்றைய தினம் அவர் பயணித்த விண்கலத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
இன்று விண்வெளி துறையில் இந்தியா தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் நாம் இந்த நிலையை அடையப் பல ஏகப்பட்ட கஷ்டங்களைச் சந்தித்துள்ளோம். மேலும், பலர் இதற்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்துள்ளனர்.
அப்படி விண்வெளி துறையில், அதிலும் குறிப்பாகப் பெண்களும் விண்வெளி துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர் கல்பனா சாவ்லா. இருப்பினும், எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட மரணம் என்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

20 ஆண்டுகளுக்கு முன்பு
20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அந்த மோசமான சம்பவம் நடந்தது. அன்று கிட்டத்தட்ட அனைத்துமே திட்டமிட்டபடியே நடந்தது. ஆனால் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கவில்லை. இது பேரழிவில் முடிந்தது. விண்வெளியில் 15 நாட்கள் இருந்த அந்த ஏழு விண்வெளி வீரர்கள் பூமியை நெருங்கிக் கொண்டு இருந்தார்கள். 15 நாட்கள் ஜீரோ புவியீர்ப்பிலிருந்த அவர்களைப் பூமியின் புவியீர்ப்பு இழுத்தது.. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2023இல் பிப்ரவரி 1, 2003 அன்று கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் அந்த விண்கலம் தரையிறங்குவதாக இருந்தது.

மோசமான விபத்து
சாட்டிலைட் மீண்டும் பூமிக்கு வருவதைக் கவனித்து வந்த இயக்குநர் லெராய் கெய்ன், சாட்டிலைட் பூமிக்கு வரக் கடைசி க்ரீன் லைட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து கொலம்பியா கமாண்டர் ரிக் ஹஸ்பண்ட் பூமியை நோக்கி சாட்டிலைட்டை இறக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினார். அந்த விண்கலத்தில் இந்தியாவின் கல்பனா சாவாலா உட்பட ஏழு பேர் இருந்தார்கள். பூமியை அடைய சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அந்த பேரழிவு ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றிலும் ஸ்பேஸ் ஆய்வு வரலாற்றிலும் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

என்ன நடந்தது
சாட்டிலைட் பூமிக்கு வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், கண் முன்னே அது சுக்கு நூறாக உடைந்து சாம்பலானது. கீழே இருந்த ஆய்வாளர்களால் அவர்கள் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. நொடிகளில் அந்த விண்கலம் வெடித்துச் சிதறியது அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். விண்கலம் பூமியை நோக்கி வரத் தொடங்கியதும் அதன் ஹைட்ராலிக் திரவ வெப்பநிலை குறைந்துள்ளது. மற்ற அனைத்து ஹைட்ராலிக் அமைப்பும் நன்றாக இருந்தபோதும், இது மட்டும் தொடர்ந்து குறைந்துள்ளது. இதில் எங்குத் தவறு என்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..

கையை மீறிச் சென்றது
இதையடுத்து அங்கு திடீரென இடது பக்கத்தில் அழுத்தம் குறைந்தது.. சரியான அழுத்தம் இல்லாமல் விண்கலத்தால் தரையிறங்க முடியாது. அது பூமியை நோக்கி நெருங்க நெருங்க அதில் இருந்த பல சென்சார்கள் செயலிழக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் விண்கலத்துடன் இருந்த அனைத்து தொடர்புகளும் கட் ஆனது. கீழே இருந்த ஆய்வாளர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் கொலம்பியா விண்கலத்தைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. ஆய்வாளர்கள் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போதே, அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. டெக்சாஸ் மக்கள் வானத்தில் அந்த கொடூர காட்சியை கண்டனர். ஏழு பேரும் நொடிகளில் சாம்பலானார்கள்.

என்ன காரணம்
இந்த கொடூர விபத்திற்குப் பின்னர், தவறு எங்கு நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. மேலும், விண்வெளி திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விசாரணையில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அந்த விண்கலம் பூமியில் இருந்து 2003 ஜன. 16ஆம் தேதி புறப்பட்ட நிலையில், அப்போதே அதன் அழிவு முடிவாகவிட்டது.. விண்கலத்தின் வெளிப்புற டேங்கில் இருந்து ஒரு பெரிய ஃபோர்ம் கீழே விழுந்தது.. இதுவே விண்கலத்தின் ஒரு பகுதியில் தேசத்தை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது.

சென்சார் இழப்பு
அந்த விண்கலம் புறப்பட்டு 82 வினாடிகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில், விண்கலம் மீண்டும் பூமியில் நுழைந்த போது அதன் ஓட்டை வழியாக விண்கலத்திற்குள் காற்று வந்துள்ளது. இது சென்சார் இழப்பிற்கும், கடைசியாக ஒட்டுமொத்த அழிவுக்கும் காரணமாக அமைந்துள்ளது. அப்போது அந்த விண்கலம், ஒலியின் வேகத்தை விட 18 மடங்கு வேகத்தில் பயணித்துள்ளது. பூமியில் இருந்து 61,170 மீட்டர் உயரத்தில் இருந்த போது அது வெடித்துச் சிதறியுள்ளது.

யார் இந்த கல்பனா சாவ்லா
விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியதை ஒட்டுமொத்த உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. கல்பனா சாவ்லாவின் சொந்த ஊரான ஹரியானா கர்னலில் இதைப் பார்த்தவுடன் கிராம மக்களே துக்கத்தில் உறைந்து போனார்கள். இதே கர்னலில் 1962ஆம் ஆண்டு பிறந்தவர் கல்பனா.. 1976 ஆம் ஆண்டு கர்னாலில் உள்ள தாகூர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற சாவ்லா, 1988ஆம் ஆண்டில் நாசாவில் வேலை செய்யத் தொடங்கினார்.

முதல் திட்டம் வெற்றி
அங்குத் தொடர்ச்சியாக சில ஆண்டுகள் பணிபுரிந்த கல்பனா சாவ்லா, 1997ஆம் ஆண்டு முதல்முறையாக STS-87 திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிக்குச் சென்றார். 6 பேர் கொண்ட குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார். பூமியை 252 முறை சுற்றிய அவர், 376 மணி 34 நிமிடங்களில் விண்வெளியில் இருந்தார். முதல்முறை அவர் வெற்றிகரமாகப் பூமியில் இறங்கினார். ஆனால், இரண்டாம் முறை ஏற்பட்ட சின்ன பாதிப்பு மிக மோசமான அழிவை ஏற்படுத்திவிட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications