Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டன் பிரதமராவது இருக்கட்டும்.. ரிஷி சுனக் என்ன சாதி? கூகுளில் தேடல் படலம்.. விதைபோட்ட கிகே சாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரிட்டன் பிரதமராக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் சாதியை வழக்கம்போல் இணையதளங்களில் இப்போதே தேடும் பணியை தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.

இந்தியர்கள் ஏதாவது ஒரு சாதனை புரிந்துவிட்டாலோ அல்லது சர்ச்சையில் சிக்கினாலோ அவர்களின் சாதியையும் மதத்தையும் இணையதளத்தில் தேடுவது வாடிக்கையாகிவிட்டது.

பொதுவாக பெயர்களை வைத்து மதம் என்னவென்று கண்டுபிடித்துவிட முடியும். வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றால் பெயருக்கு பின்னால் உள்ள சாதி பெயரை வைத்து அதை அறிந்துகொள்வார்கள்.

தமிழ்நாட்டில் சாதி

தமிழ்நாட்டில் சாதி

ஆனால், தமிழ்நாட்டில் 99% மக்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடுவதில்லை. இருப்பினும் அவர்களின் சாதியை அவர்கள் வசிக்கும் பகுதி, அவர்களின் மூதாதையர்களின் பெயர்கள், உணவு பழக்க வழக்கம், குலதெய்வத்தை வைத்து எளிதில் சிலர் கண்டறிந்துவிடுகிறார்கள்.

கூகுளில் தேடப்படும் சாதி

கூகுளில் தேடப்படும் சாதி

இதுவே ஒரு பிரபலம் என்றால் அவரது சாதியை தெரிந்துகொள்ள இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கூகுள்தான். கூகுளில் சென்று குறிப்பிட்ட பிரபலத்தின் பெயரை டைப் செய்து என்ன சாதி என்று ஆங்கிலத்தில் தேடினால் அதில் ஏதாவது ஒரு தகவல் கிடைக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால், பெரும்பாலும் தவறான தகவலே அதில் கிடைக்கும்.

சாதி தேடும் படலம்

சாதி தேடும் படலம்

விளையாட்டில் சாதனை படைத்த வீரர், வீராங்கணைகள், சினிமா, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஏதாவது குற்றச் செயல்களில் சிக்கியவர்கள் என யாரையும் இவர்கள் விட்டுவைப்பது கிடையாது. கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை பிவி சிந்துவின் சாதியையும் இவர்கள் இவ்வாறே தேடினார்கள்.

ரிஷி சுனக் சாதி

ரிஷி சுனக் சாதி

இந்த நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்க இருக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. ரிஷி சுனக்கின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இல்லாததால் இவர்கள் பாடு திண்டாட்டமாகி உள்ளது. பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது இரண்டாம் பெயரான சுனக் என்பது சாதி பெயர் இல்லை எனவும் அங்குள்ள ஏராளமான மக்கள் இந்த பெயரை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிஷோர் கே சாமி

கிஷோர் கே சாமி

இதை முதலில் தொடங்கி வைத்தவர் பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி. இது தொடர்பாக ட்விட்டரில் அவர் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். முதல் பதிவில், "நான் கேள்விப்பட்ட வரை ரிஷி சுனக் ஸ்மார்தா ஐயர். இது சரியா?" என்று குறிப்பிட்டார். 2 வது பதிவில் "ரிஷி சுனக் கத்ரி சாதி இந்து என்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.

அறியாமை

அறியாமை

வேறு சிலர் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியின் சாதியை கண்டுபிடித்து அதை வைத்து ரிஷி சுனக்கின் சாதியை வெளியிட்டு வருகிறார்கள். வெள்ளையர்களால் நிர்வாகத் திறமை அற்றவர்கள் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் வம்சாவளி ஒருவர் அவர்கள் நாட்டிற்கே பிரதமராகி பெருமையை தேடித் தந்துள்ளவரை சாதி, மத வட்டத்திற்குள் சுருக்குவது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+