நினைத்த நேரத்தில் கார் ஓட்ட முடியாது.. நாளெல்லாம் காத்திருக்கனும்.. டெல்லியில் வந்த ரேஷன் நடைமுறை!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
No 'good air' in national capital | டெல்லியில் பொறுத்துக் கொள்ள முடியாத காற்று மாசு !
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், 'கார் ரேஷன்' நடைமுறையை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
டெல்லியில் வாகனப் போக்குவரத்தை குறைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆட்-ஈவன் (Odd-Even) என்ற இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இன்று ஆரம்பித்து உள்ள இந்த கெடுபிடி வரும் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
- அதாவது வாகனங்களின் பதிவு எண், 2, 4, 6, 8 போன்ற இரட்டைப் படை (Even) எண்களில் முடிவடைந்தால் அந்த வாகனங்களை, Even நாட்களில் மட்டுமே சாலையில் ஓட்ட முடியும்.
- 3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை (Odd) எண்களில் முடிவடைந்தால் அந்த கார்கள், அதுபோன்ற தினங்களில் தான் சாலையில் இயங்க முடியும்.
- இந்த விதிமுறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விதிவிலக்கு.
- அதேநேரம் இருசக்கர வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தாது. அதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நெறிமுறை பொருந்தாது.
- 2016ம் ஆண்டில் இது போன்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது எரிவாயு சிலிண்டர் மூலமாக இயங்கக்கூடிய கார்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டது, ஆனால் இப்போது எரிவாயு மூலம் இயங்கக்கூடிய வாகனங்களுக்கும் விலக்கு கிடையாது.
- அரசின் இந்த விதிமுறையை மீறி இயங்கக்கூடிய வாகனங்களுக்கு ரூ.4000 வரை அபராதம் விதிக்கப்படும்,
- இதில் மற்றொரு சலுகையும் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தவறான பதிவு எண் இருந்தால் கூட பெண்கள் மட்டுமே காரை இயக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. கூடவே ஆண் யாராவது அமர்ந்திருந்தால் அப்போது அபராதம் கேரண்டி.
- மேலும் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடிய தனியார் பஸ்களும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற விஐபிகளுக்கு இதில் விலக்கு உண்டு.
Delhi: Chief Minister Arvind Kejriwal, & Ministers Gopal Rai and Satyendar Jain leave for work in an even-numbered vehicle. #OddEven pic.twitter.com/pMhfCj8BGE
— ANI (@ANI) November 4, 2019
இன்றைய தினம், 4ம் தேதி என்பதால், இது Even நாளாகும். எனவே, முதல்வர் கேஜ்ரிவால் 2ல் முடிவடையும் பதிவு எண் கொண்ட வாகனத்தில் இன்று அலுவலகம் வந்திருந்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications