டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

NeoCov: நியோகோவ் என்றால் என்ன? என்னென்ன அறிகுறிகள்? முழு விவரம் இதோ!

Google Oneindia Tamil News

டெல்லி: தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக வூஹான் விஞ்ஞானிகள் சொல்லும் நியோ கோவ் வைரஸ் என்றால் என்ன?

Recommended Video

    NeoCov எப்படிப்பட்டது? | Data Analyst Vijayanand | Oneindia Tamil

    கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலக நாடுகளுக்கு பரவி இதுவரை பெரும்பாலான நாடுகளில் பரவி விட்டது.

    இந்த வைரஸ் டெல்டா, பீட்டா, காமா, ஓமிக்ரான், டெல்சிக்ரான், டெல்மிக்ரான் என புதிய புதிய வேரியண்ட்டுகளாக பரவி வருகின்றன. இந்தியாவில் டெல்டா எனும் புதிய வேரியண்ட் மிக அதிகளவிலான பாதிப்பை கொடுத்தது.

    பிட்ஸ்பர்க்கில் மூன்று துண்டாக நொறுங்கிய பாலம்..சரிந்து விழுந்த வாகனங்கள் - உடனே வந்த பிடன் பிட்ஸ்பர்க்கில் மூன்று துண்டாக நொறுங்கிய பாலம்..சரிந்து விழுந்த வாகனங்கள் - உடனே வந்த பிடன்

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்கா

    இந்த வைரஸ் ஓய்ந்த நிலையில் ஓமிக்ரான் எனும் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவை காட்டிலும் மிக வேகமாக பரவக் கூடியது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி வருகிறது. ஆனாலும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அது போல் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.

    இரண்டு டோஸ்

    இரண்டு டோஸ்

    இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசிதான் என சொல்லப்படுகிறது. இரண்டு டோஸ் போட்டுக் கொண்டு அரசு அனுமதித்தவர்கள் மூன்றாவதாக பூஸ்டர் டோஸையும் செலுத்திக் கொள்வதால் பாதிப்பு அந்த அளவுக்கு ஏற்படவில்லை. இதனால் கொரோனா தொற்று முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தன.

    உருமாற்றம்

    உருமாற்றம்

    இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் MERS-Cov எனும் நியோகோவ் (Neo Cov) எனும் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 3 பேருக்கு இருந்தால் அதில் ஒருவரை கொல்லும் அளவுக்கு மிகவும் கொடியது என சீனாவின் வூஹான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல என வூஹான் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    வைரஸ்

    வைரஸ்

    மேலும் இது வவ்வாலில் இருந்து பரவலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி போதாது என்கிறார்கள். நியோகோவ் என்பது மத்திய கிழக்கு நுரையீரல் தொடர்பான தொற்று எனப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் MERS- Coronavirus என்பதாகும். இது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

    நியோகோவ் என்றால் என்ன?

    நியோகோவ் என்றால் என்ன?

    நியோகோவ் வவ்வால்களில் காணப்படும் கொரோனா வைரஸ். இது 2011 இல் கண்டறியப்பட்டுள்ளது. நியோரோமிசியா எனும் வகையான வவ்வால்களில் காணப்பட்டது. இதிலிருந்துதான் நியோ கோவ் என்ற பெயர் வரப்பெற்றது. இதற்கு ஆலோ வவ்வால்கள் என்றும் பெயர். இவை ஆப்ரோ- மலகசி பகுதிகளில் காணப்படும். விலங்குகள் மூலம் பரவுகிறது. ஒரே ஒரு முறை உருமாற்றம் அடைந்தால் மனிதர்களுக்கு பரவும் ஆற்றல் கொண்டது. இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் உள்ளிட்டவை ஏற்படும். இது மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பரவியது. இந்த தொற்றால் நிறைய பேர் உயிரிழந்தனர். இது 35 சதவீதம் அளவுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    English summary
    What is Neo Cov? the New variant reviewed by Wuhan Scientist which leds to death 1 in 3.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X