டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவுக்கு கடிவாளம் போடும் பிரதமர் மோடி! வந்துவிட்டது சூப்பர் திட்டம்.. இனிமேல் அசுர வளர்ச்சி தான்

Google Oneindia Tamil News

டெல்லி: மொபைல்போன் உற்பத்தி சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. அதிலும் கல்வான் மோதலுக்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது.

இந்தியா உடன் மட்டுமின்றி அமெரிக்கா தொடங்கி கிட்டதட்ட அனைத்து உலக நாடுகள் உடனும் சீனா மோதல் போக்கையே வைத்து இருக்கிறது. இதனால் பல நாடுகளும் சீனா மீது அதிருப்தியில் உள்ளன.

 அந்த 6 பேர்.. பெங்களூர் வரை நுழைந்த சீனா? மெகா மோசடி..மொத்த கன்டிரோல் அவர்களிடம் தானாம்! பரபர தகவல் அந்த 6 பேர்.. பெங்களூர் வரை நுழைந்த சீனா? மெகா மோசடி..மொத்த கன்டிரோல் அவர்களிடம் தானாம்! பரபர தகவல்

சீனா

சீனா

இருப்பினும், பல உலக நாடுகளால் சீனாவிடம் அமைதியான போக்கையே வைத்து உள்ளது. ஏனென்றால் உற்பத்தித் துறையில் சீனாவையே அவர்கள் நம்பி இருந்தனர். அதிலும் குறிப்பாக மொபைல் உற்பத்தி சந்தையில் அனைத்து நாடுகளையும் விடச் சீனா தான் முன்னணியில் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கூட தனது ஐபோன் உற்பத்திக்குச் சீனாவையே முழுவதுமாக நம்பி இருந்தது.

ஐபோன்

ஐபோன்

இருப்பினும், இப்படி ஒரே நாட்டை மொபைல் உற்பத்திக்கு நம்பி இருப்பது ஆபத்து என்பதை கொரோனா காலத்தில் டெக் நிறுவனங்கள் உணர்ந்து கொண்டன. இதனால் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி $1 பில்லியினை தாண்டியுள்ளது.. மின் கருவிகள் உருவாக்கச் சந்தையில் மிகப் பெரிய சக்தியாக இந்தியா மாறும் முயற்சியே இதுவாகும்.

 இரட்டிப்பு

இரட்டிப்பு

தற்போது இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்கள் பெரும்பாலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தான் செல்கிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் இது 2.5 பில்லியின் டாலர்களை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டதட்ட இரட்டிப்பு வளர்ச்சியாகும். இந்திய ஐபோனின் ஒட்டுமொத்த தயாரிப்பில் மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் கூட இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "ஆப்பிளுக்குச் சீனாவிடம் இருந்து இப்போது முழுமையாக வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை. சீனாவுக்கு நிகராக மற்றொரு இடத்தில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. இதற்காகச் சீனா+1 என்ற திட்டத்தை அவர்களிடம் கையில் எடுத்து உள்ளனர். அதற்கு இந்தியா சரியான நாடாக இருக்கும்" என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 சலுகை

சலுகை

இந்தியாவில் மொபைல் போர் அசெம்பிள் செய்வதை ஊக்குவிக்க மத்திய அரசு கடந்த 2020இல் மிகப் பெரிய சலுகை திட்டத்தை அறிவித்தது. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆப்பிள் உற்பத்தியாளர்கள், ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர். இருப்பினும், ஒப்பீட்டளவில் இப்போது இந்தியாவில் 30 லட்சம் ஐபோன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரம் சீனாவில் 23 கோடி ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

 நீண்ட பாதை

நீண்ட பாதை

சீனாவைப் பிடிக்க நாம் அதிக தூரம் செல்ல வேண்டும் என்றாலும் கூட சரியான பாதையில் செல்ல தொடங்கி உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மொபைல் போன்களை தாண்டி டேப்லெட், லேப்டாப் உற்பத்திக்கும் சலுகையை இந்தியா அறிவித்து உள்ளது. இதன் மூலம் எலக்டிரானிக் சந்தையில் சீனாவுக்கு மாற்றாக நம்மால் உருவாக முடியும். இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாகவே சீனாவில் இந்த நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்து உள்ளன. எனவே, சீனாவில் இருந்து வெளியே வருவது அத்தனை எளிதாக இருக்கப் போவது இல்லை.

English summary
PM Modi is planning to launch new incentives to increase tablet and laptop prodction: Modi's plan to counter china's growth in mobile production.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X