டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்றே கடைசி! உங்ககிட்ட கிரெடிட், டெபிட் கார்டுகள் இருக்கா? டேட்டா பாதுகாப்பு.. இதை மறக்காம பண்ணுங்க

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு கிரெடிட், டெபிட் கார்டு தரவுகளை சேமிப்பது தொடர்பாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நாளை முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது.

இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் கணினி வசம் என்றாகிவிட்டது. இன்றைய சூழலில் டிஜிட்டல் பேமெண்ட்கள் தான் முக்கியமானதாக உருவெடுத்து உள்ளது.

பெரிய மால்கள் தொடங்கிய பெட்டிக் கடைகள் வரை அனைத்திலும் டிஜிட்டல் பேமெண்ட்கள் தான் முக்கியமானதாக உள்ளன. பல காரணங்களால் டிஜிட்டல் பேமெண்ட்டை விரும்புகின்றனர்.

 கிரெடிட், டெபிட் கார்டு இருக்கா? டேட்டாவை பாதுகாக்க மறக்காம இதை பண்ணுங்க.. கொஞ்ச நாள் தான் இருக்கு கிரெடிட், டெபிட் கார்டு இருக்கா? டேட்டாவை பாதுகாக்க மறக்காம இதை பண்ணுங்க.. கொஞ்ச நாள் தான் இருக்கு

 டிஜிட்டல் பேமெண்ட்

டிஜிட்டல் பேமெண்ட்

திருட்டு பயம், பயன்படுத்த மிக எளிமை எனப் பலரும் டிஜிட்டல் பேமெண்ட் பக்கம் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நமது நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் வைரஸ் பரவல் அச்சம் காரணமாகப் பலரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தத் தொடங்கினர். டிஜிட்டல் முறையில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் கூட, அதிலும் திருட்டு பயம் இருக்கவே செய்கிறது. ஆன்லைனில் நாம் பேமெண்ட் செய்யும் போது, கார்டு தரவுகளைத் திருடப்படும் ஆபத்து இருக்கிறது.

 இன்று கடைசி

இன்று கடைசி

இதை தடுக்கவும் பணம் திருடப்படுவதை நிறுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் மற்றும் இன்-ஆப் பரிவர்த்தனைகளில் (in-app transactions) என அனைத்து வகையான பரிவர்த்தணைகளிலும் சேமிக்கப்படும் எல்லா கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தரவுகளும் இன்றுக்குள் (செப்டம்பர் 30) டோக்கன்களாக மாற்றப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.

 டோக்கனாக்கும் நடவடிக்கை

டோக்கனாக்கும் நடவடிக்கை

இந்த டோக்கன் மயமாக்கும் நடவடிக்கை மூலம் கிரெடிட், டெபிட் கார்டு தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். மேலும், பரிவர்த்தனைகளையும் எளிதாக்கும். ஹேக்கர்களிடம் இருந்து நமது கார்டு தரவுகளைப் பாதுகாக்க, கார்டு விவரங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டு, அவை அனைத்தும் டோக்கனாக மாற்றி சேமிக்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறித்த எந்தவொரு தகவலும் தளங்களால் அல்லது செயலிகளால் சேமித்து வைக்க முடியாது. இதன் காரணமாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவையாக மாறுகிறது.

 சேமிக்க முடியாது

சேமிக்க முடியாது


ஆன்லைனில் நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து உள்ள நிலையில், அதைத் தடுக்கவே இந்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. பரிவர்த்தனைகளை எளிமையாக்க கிரெடிட்ட மற்றும் டெபிட் கார்டுகளின் எண், CVV மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை தளங்கள் சேமித்து வைத்து இருக்கும். இதை ஹேக்கர்கள் திருடி பணத்தை எடுக்கும் ஆபத்து உள்ளன. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, கார்டு தகவலை சம்பந்தப்பட்ட கார்டு நிறுவனங்கள் தவிர வேறு யாரும் சேமித்து வைக்க முடியாது. அப்படிச் சேமித்து வைக்கும் டேட்டாக்களையும் இன்றிரவுக்குள் டெலிட் செய்ய வேண்டும்.

 கட்டாயமா?

கட்டாயமா?

இது முற்றிலும் இலவசம் என்றும் இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை என்பதையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இந்த டோக்கன் முறை கட்டாயம் எல்லாம் இல்லை. டோக்கனாக உங்கள் கார்டு தரவுகள் சேமிக்கப்படுவதை விரும்பவில்லை என்றால், இதைச் செய்யத் தேவையில்லை. ஆனால், பிறகு ஒவ்வொரு முறையும் உங்கள் கார்டு தரவுகளைப் பதிவிட்டே பரிவர்த்தனை செய்ய முடியும்.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

அதேநேரம் பயனாளர்களும் இதைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக கார்டு தரவுகளை டோக்கன்களாக மாற்றப்பட உள்ளது. இந்த முறை உள்நாட்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. அது சரி, நமது கார்டு தரவுகளை டோக்கனாக மாற்றும் செயல்முறை எப்படி எனக் கேட்கிறீர்களா? அது ரொம்பவே ஈஸி.

 என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

நாம் பேமெண்ட் செய்ய வேண்டிய வாங்கும் தளங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவிடுங்கள்

அங்கு கார்டை டோக்கனாக மாற்ற வேண்டும் என்று பாப்அப் வரும், அதைத் தேர்வு செய்து டோக்கனாக மாற்ற அனுமதிக்க வேண்டும்.

பரிவர்த்தனையை முடிக்கவும் இந்த செயல்முறையை அனுமதிக்க வேண்டும்.

இந்த எளிய ஸ்டெப்களை பின்பற்றினால் போதும், கார்டின் தரவுகள் பாதுகாப்பாக டோக்கன்களாக மாற்றிச் சேமிக்கலாம்.

English summary
Today is the last date to Store your Debit, Credit Cards safely: RBI new guidelines about Tokenisation of Debit, Credit Cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X