பல மணி நேரமாக சேவை முடக்கம்.. பயனர்கள் அவதி.. என்ன நடக்கிறது?.. வாட்ஸ் அப், பேஸ்புக் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் பல மணி நேரத்துக்கும் மேலாக முடங்கி உள்ளன. இந்த முடக்கம் குறித்து வாட்ஸ் அப், பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    Facebook, Instagram முடக்கத்தால் Mark Zuckerberg-க்கு எவ்வளோ இழப்பு தெரியுமா?

    இன்றைய தகவல் தொழிநுட்ப புரட்சியில் இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

    சேவைகள் முடக்கம்

    சேவைகள் முடக்கம்

    இந்த நிலையில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் பல இடங்களில் முடங்கி இருப்பது இதனை பயன்படுத்தும் பயனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சேவை முடங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சேவைகள் முடங்கி உள்ளன. இதற்கு முன்பு மார்ச் மாதம் சுமார் 17 நிமிடங்கள் இந்த சேவைகள் முடங்கின.

    டுவிட்டரில் ஆதங்கம்

    டுவிட்டரில் ஆதங்கம்

    ஆனால் தற்போது இந்த சேவைகள் பல மணி நேரம் முடங்கி இருக்கின்றன. இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் இயங்ககவில்லை என்று டுவிட்டர் ஹாஷ்டேக்கில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். ஐ.பி.எல் தொடர்பான தகவல்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று ஒரு தரப்பும், நண்பர்கள், நண்பிகளிடம் சாட் செய்ய முடியவில்லை என்று ஒரு தரப்பும் டுவிட்டரில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றன.

    தொழில்நுட்ப கோளாறு

    தொழில்நுட்ப கோளாறு

    இந்த பல மணி நேர முடக்கம் குறித்து அறிக்கை வெளியிட்டு வாட்ஸ் அப், ''சிலர் தற்போது வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விஷயங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், விரைவில் இங்கே ஒரு புதுப்பிப்பை அனுப்புவோம்'' என்று கூறியுள்ளது.

    பேஸ்புக் மன்னிப்பு கேட்டது

    பேஸ்புக் மன்னிப்பு கேட்டது

    தங்கள் சேவையில் தடங்கல் ஏற்பட்டதற்காக பேஸ்புக் மன்னிப்பு கேட்டுள்ளது, இது தொடர்பாக பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் இந்த சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்'' என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+