Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானி விவகாரத்தில்.. மத்திய அமைச்சருக்கு நேரடியாக தொடர்பு.. காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு

பெரும் தர்மசங்கடத்தில் இருந்து அதானியை காப்பாற்ற, உயர் பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் 5 - 6 தொழிலதிபர்களைத் தொடர்புகொண்டு அவர்களை நிர்ப்பந்திப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொழிலதிபர் கெளதம் அதானியின் பங்குகளில் எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறதா எனப் பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப் பல முன்னணி தொழிலதிபர்களிடம் மத்திய அமைச்சர் ஒருவர் பேசி வருவது உண்மையா? என்றும் காங்கிரஸ் வினவியுள்ளது.

அதானி பங்குச்சந்தை மோசடியில் ஏற்கனவே பிரதமர் மோடியைக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ், தற்போது இந்த விவகாரத்தில் மேலும் ஒரு சாட்டையை கையில் எடுத்துள்ளது.

சாட்டையை சுழற்றும் எதிர்க்கட்சிகள்

சாட்டையை சுழற்றும் எதிர்க்கட்சிகள்

தொழிலதிபர் கெளதம் அதானி தொடர்பான அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவையே உலுக்கியுள்ளது. பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகளில் அவர் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்துள்ளது. இதனிடையே, இந்த மோசடியில் பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்புப்படுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் சரமாரி கேள்வி

காங்கிரஸ் சரமாரி கேள்வி

இது ஒருபுறம் இருக்க, தற்போது மற்றொரு புதிய பூதத்தைக் காங்கிரஸ் கிளப்பிவிட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 10-க்கும் மேற்பட்ட கேள்விகளை அக்கட்சி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி, எல்ஐசி உள்ளிட்டவை, பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனவா? அதானி குழுமத்தை காப்பாற்றும் நோக்கத்திற்காக மேலும் பல கோடி இந்தியர்களின் சேமிப்புப் பணம் அவற்றில் முதலீடு செய்யப்படுகிறதா?

மத்திய அமைச்சருக்குத் தொடர்பா?

மத்திய அமைச்சருக்குத் தொடர்பா?

பெரும் தர்மசங்கடத்தில் இருந்து அதானியை காப்பாற்ற, உயர் பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் 5 - 6 தொழிலதிபர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் பணத்தை அதானி பங்குகளில் முதலீடு செய்யுமாறு நிர்ப்பந்தம் செய்தனரா? அதானி விவகாரத்தில் நியாயமான விசாரணைக்கு இந்த செயல்கள் முரணாக இருக்காதா? உங்கள் (நரேந்திர மோடி) அறிவுறுத்தலின் பேரில்தான் அந்த மத்திய அமைச்சர் இவ்வாறு செயல்படுகிறாரா?

"மவுனத்தைக் கலையுங்கள்"

முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த விவகாரங்களை மறைப்பது என்பது இந்திய பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல் ஆகாதா? முதலீட்டாளர்களை இப்படி ஏமாற்றுவது நியாயம்தானா? பிரதமர் அவர்களே, உங்கள் மவுனத்தை இன்றைக்காவது உடையுங்கள் என ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே, காங்கிரஸின் இந்த கேள்விகளுக்கு பாஜக மூத்த தலைவர்கள் யாரும் எதிர்வினையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+