Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'4-ல் ஒன்னு சொல்லுங்க'. . 'உங்க குணாதிசயத்தை தெரிஞ்சுக்கங்க'. . ஜாலியா ஒரு விளையாட்டு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: படத்தில் உள்ள 4 வன விலங்குகளில் எது ஒன்றை நீங்கள் தேர்வு செய்கிறீர்களோ அதை வைத்து உங்களது குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம்.

என்னதான் நவீன ஸ்மார்ட் உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும், நம்மைப் பற்றியும் நமது குணநலன்கள் பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள் அரிது என்றே சொல்லலாம்.

எனவே, இப்படி குணாதிசயங்களை கணிக்ககூடிய ஆப்டிகல் இல்யூஷன் போன்ற படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

4 விலங்குகளில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்

4 விலங்குகளில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்

அந்த வகையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள விலங்குகளை கொண்டு நமது குணாதிசயங்களை கணிக்கும் ஒரு ஜாலியான சோதனைதான் இது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள 4 விலங்கினங்களை நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்களோ அதை வைத்து நீங்கள் எப்படிப் பட்ட குணாதிசயங்களை கொண்டவர்கள் என்பதை சொல்லிவிட முடியும் என்கிறார்கள். குறிப்பாக அதிகம் கோபப்படுவீர்களா ? அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்வீர்கள்?, உங்கள் பலம், பலவீனம் என்ன? என்பதை சொல்லிவிடலாம் என்கிறார்கள்.

 நீங்கள் எப்படிப்பட்டவர்கள்

நீங்கள் எப்படிப்பட்டவர்கள்

கிமு ஐந்தாம் நூற்றாண்டில் சீனர்கள் விலங்கினங்களுக்கும் மனித எண்ண ஓட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அங்கீகரித்து அதன் மூலம் ஒருவரின் குணாதிசயங்களை கணித்ததாக நாம் ஏற்கனவே கேள்வி பட்டு இருக்கிறோம். இங்கே நான்கு விலங்கினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, சிங்கம், நீர்நாய், நீரெலி, வீட்டு நாய் ஆகிய நான்கு விலங்கினங்களில் நீங்கள் எதை தேர்வு செய்கீறிர்களோ அதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சொல்லிவிடுகிறோம். . . வாங்க பார்க்கலாம். .

 சிங்கத்தை தேர்வு செய்தால்

சிங்கத்தை தேர்வு செய்தால்

சிங்கம் தான் உங்களின் முதல் தேர்வாக இருந்தால், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள நீங்கள் எந்த தயக்கமும் காட்டாதவர்களாகவே இருப்பீர்கள். எந்த காரியத்தையும் நடத்தி முடித்து விடுவீர்கள், சவால்களை அனுபவித்து செய்வதில் வல்லவராக இருப்பீர்கள். இலக்குகளை எப்படியும் எட்டி சாதித்து விடுவீர்கள், உங்களுக்கு தேவையானவற்றை பெறுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொடர்ந்து வெற்றிக்கான பாதையில் பயணிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள். உறுதித்தன்மை, தன்னம்பிக்கை, வலுவான தன்மை, போட்டிக்குணம், ஆக்கப்பூர்வமான சிந்தனை, துணிச்சல், முடிவுகளை எடுப்பவர்கள், தனித்தன்மை கொண்டவர்கள், தலைமைப்பண்பு, கடின உழைப்பு ஆகியவை உங்களிடம் இயல்பிலேயே இருக்கும்.

 வாக்குவாதம் செய்யும் நபராக

வாக்குவாதம் செய்யும் நபராக

உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும் என்றால், ஒன்று சரியாக செய்யுங்கள், அல்லது எனது வழியில் என்னை செயல்பட விடுங்கள்' என்றே இருக்கும். எளிதில் தொடர்பு கொள்ள முடியாதவராகவும், கோபப்படும் நபராகவும், அச்சுறுத்தும் நபராகவும் பிறர் உங்களை பார்ப்பார்கள். தலைமை ஏற்று வழிநடத்தி செல்வதை மிகவும் ரசிப்பீர்கள். எத்தனையோ நல்ல குணநலன்கள் இருந்தாலும் உங்களின் நெகட்டிவ் பக்கம் என்னவென்றால், பிறநபர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற மாட்டீர்கள். பிறரை பற்றி எந்த கவலையும் படாமல் உங்கள் வேலைகளை முடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் நபராக இருக்கக்கூடும். உங்கள் நேரம் வீணடிக்கப்படுகிறது என்று தெரிந்தாலோ, உங்களின் ஆலோசானை புறக்கணிக்கப்படுகிறது என்று நினைத்தாலோ உடனே நீங்கள் எரிச்சல் அடைவீர்கள் அல்லது கோபம் அடைந்து வாக்குவாதம் செய்யும் நபராக இருக்கலாம்.

 நீர் நாயை தேர்வு செய்தால்

நீர் நாயை தேர்வு செய்தால்

நீர் நாயை தேர்வு செய்யும் நபராக நீங்கள் இருந்தால் உங்கள் மாற்றத்தை ரசிப்பவராகவும் புதியதை தொடங்குவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பீர்கள். உங்கள் ஐடியாக்களை பிறருக்கு வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் நபராக இருப்பீர்கள். அந்த பொழுதில் வாழும் நபராக இருக்கூடும். புதுமையான எண்ணங்களையும் அதிகம் பேசிக்கொண்டும் ஜாலியான நபராக நீங்கள் இருப்பீர்கள். அனைவரும் நட்பாக பழகும் தன்மையும், கிரியேட்டிவ் எண்ணமும் உடையவராக இருப்பீர்கள். சமூக வலைத்தளங்கள், குடும்பங்கள், நண்பர்கள் என அனைவராலும் மிகவும் விரும்பபடும் நபராக நீங்கள் வலம் வருவீர்கள்.

 மிகவும் அன்பு கொண்டவர்

மிகவும் அன்பு கொண்டவர்

இருந்தாலும் உங்கள் மீதே உங்களுக்கு சந்தேகம் கொண்டவராகவும் தோல்விக்கு அஞ்சும் போக்கும் உங்களிடம் இருக்கும். தலைமைப்பண்பு பற்றி பேசுவதையே தவிர்த்து விடுவீர்கள். குழுவாக சிறப்பாக செயல்பட முனைப்பு காட்டுவீர்கள். எதையும் விரைவாக தொடங்கும் ஆற்றல் பெற்ற நீங்கள் அரைகுறையாக விட்டுச் செல்லவும் தயக்கம் காட்ட மாட்டீர்கள் என்பது உங்களுக்கு உள்ள முக்கிய நெகட்டிவ் ஆகும். உறவுகளை பொருத்தவரை நீங்கள் மிகவும் அன்பு கொண்டவராகவே விளங்குவீர்கள். பிறர் உங்களை வெறுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மறுத்து பேச அஞ்சுவீர்கள். இதனால், சுயநலம் கொண்டவர்களுடன் நீங்கள் பழகி வந்தால் அது உங்களுக்கு பொருத்தமாக இருக்காது. உங்களிடம் புற அழகை காட்டி மயக்கி விட முடியாது. உண்மையான அன்பையே விரும்புவீர்கள். இன்ஜினியரிங், விளையாட்டு , மெடிக்கல், டிசைன், கம்யூட்டர்ஸ், கணக்கு, நீச்சல், படிப்பது ஆகியவையே உங்கள் ஹாப்பியாகவும் கரியாராகவும் இருக்கலாம்.

 நாயை தேர்வு செய்தால்

நாயை தேர்வு செய்தால்

நாயை நீங்கள் தேர்வு செய்யும் நபராக இருந்தால், நீங்கள் அதிகம் வாக்குவாதம் செய்வதை விரும்ப மாட்டீர்கள். பிறரிடம் அதிகம் ஒட்டிக்கொள்வீர்கள். அடுத்தவர் நலனுக்கே அதிகம் முன்னுரிமை அளிப்பீர்கள். மிகவும் சென்சிட்டிவ் எண்ணமும் விசுவாசமும், அமைதியும், ரிலாக்ஸாகவும் இருக்கும் நபராக இருப்பீர்கள். தாராள மனப்பான்மை, அரவணைப்பு, சகிப்புத்தன்மை, கனிவான சிந்தனை பொறுமையாக இருக்கும் நபராக இருப்பீர்கள். சில நேரம் நீங்கள் தலைமை தாங்குவீர்கள். ஆனாலும், பிறரை பின்பற்றி செல்வதில்தான் உங்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிக்ககூடியதாக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் அதிகம் மதிக்கப்படும் நபராக இருப்பீர்கள். பிறருக்கு உதவும் குணம் இயல்பிலேயே இருக்கும். உறவுகளை பொறுத்தவரை, நீங்கள்தான் மிகவும் முக்கியமான நபர் என்று உங்கள் பார்ட்னரை உணரவைக்கும் நபராக இருப்பீர்கள். இருப்பினும், சிங்கத்தின் ஆளுமையைப் போல் இன்றி நீங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விருப்பம் இருக்காது. பிரச்சினைகளையே விரும்ப மாட்டீர்கள்

 நீர் எலியை தேர்வு செய்தால்

நீர் எலியை தேர்வு செய்தால்

நீரெலியை நீங்கள் தேர்வு செய்தீர்கள் என்றால், எளிதில் எதையும் விட்டு கொடுத்து விட மாட்டீர்கள். எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்ற பெரிய பட்டியலை வைத்து அதன்படி செயல்படுவீர்கள். எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பாகவும் ஆழ்ந்து யோசித்து செயல்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவராக விளங்குவீர்கள். எதார்த்தமான நபராகவும் அக்கறை கொண்டவராகவும் விளங்குவீர்கள். வீட்டிலும் அலுவலகத்திலும் எப்போதும் பிசியாக எதையாவது செய்து கொண்டே இருப்பீர்கள். உறவுகளை பொருத்தவரை, ஆதரவு அளித்து அக்கறை காட்டும் நபராக இருப்பீர்கள். பொருளாதார ரீதியாகவும் நல்ல உதவி அளிப்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+