பாஜகவின் ‘அடுத்த குறி’ கேசிஆர் வாரிசு? டெல்லி நூல் பிடித்து தெற்கில் இறங்கும் சிபிஐ.. என்ன மேட்டர்?
டெல்லி : பாஜகவின் குறி வடக்கில் இருந்து, தென் மாநிலங்கள் நோக்கி திரும்பி இருக்கும் நிலையில், அடுத்த டார்கெட்டாக தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவை குறி வைத்திருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலர் மத்தியில் ஆளும் பாஜக அரசால், சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் மூலம் பழிவாங்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
அதை மெய்ப்பிக்கும் வகையில், மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா என பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிரடியாக ரெய்டுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சமீபத்தில், திமுக எம்.பி ஆ.ராசா மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் தான், அடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா குறிவைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

அரசியல் எதிரிகளுக்கு குறி?
கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலங்களில் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளைச் சேர்ந்த பலர் சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டுகளில் சிக்கி வந்தனர். இதில் சிலர் கைதும் செய்யப்பட்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டுகள் நடத்தப்பட்டன. மகாராஷ்டிராவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனாவின் சஞ்சய் ராவத், அணில் தேஷ் முக், உள்ளிட்டோர் இதேபோல் விசாரணையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தெற்கில்
கர்நாடகாவில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் மீதான வழக்குகளில் நெருக்கடி காட்டுகிறது சிபிஐ, அமலாக்கப் பிரிவு. அதேபோல, தமிழகத்தில் திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு நெருக்கடி தரும் வகையில்தான் தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அரசியல் எதிரிகளை குறிவைக்கும் பாஜகவின் ஆபரேஷன் தெற்கு நோக்கி நகர்ந்து உள்ளதா என விவாதங்கள் எழுந்துள்ளன.

இப்போது ஏன்?
திமுக எம்பி ஆ.ராசா 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலகட்டங்களில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய விசாரணை ஏஜென்சியான சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆ. ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் 2015ஆம் ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்திய நிலையில், தற்போது ஆ.ராசா பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் இந்த நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த குறி
இப்படியான சூழலில், தெற்கில் பாஜகவின் அடுத்த குறி யார் என அரசியல் அரங்கில் பேச்சுகள் எழுந்துள்ளன. பாஜகவை தொடர்ச்சியாக கடுமையாக அட்டாக் செய்து வரும் தெலுங்கானா முதல்வரும் பி.ஆர்.எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில், அவரது மகளும் எம்.எல்.சியுமான கவிதா மீதான பிடியை இறுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. ஆம் ஆத்மி - கேசிஆர் இடையேயான நூலைப் பிடித்து தெலுங்கானாவில் இறங்க பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிக்கிய தெலுங்கானா புள்ளி
டெல்லியில் மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நடந்திருப்பதாக, டெல்லி துணை முதல்வர் மற்றும் கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ரெய்டில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தெலுங்கானாவைச் சேர்ந்த மதுபான நிறுவன இயக்குநர் போயின்பள்ளி அபிஷேக் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தான் 'குறி' கவிதா மேல் விழுந்திருப்பதாகக் கூறுகிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.

பகீர் கிளப்பிய பாஜக
டெல்லியில் மதுவிலக்கு கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ ரெய்டு தீவிரமாக நடந்தபோதே, பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா, டெல்லி கலால் கொள்கை ஊழலில் தெலுங்கானா முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ், அவரது மகள் கல்வகுந்த்லா கவிதா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி பகீர் கிளப்பினார். மேலும், அதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறி இருந்தார்.

மீட்டிங் யதேச்சையானது அல்ல
தெலுங்கானா முதல்வர் கேசிஆர் சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் ஆகியோரைச் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இப்போது மதுபான வியாபாரிகளுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்ததற்காகவும், சிசோடியாவுக்கு 4.5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்காகவும் மதுபான ஊழலில் கவிதா பெயர் இடம்பெற்றிருக்கிறது எனக் குற்றம்சாட்டியிருந்தார் அமித் மால்வியா.

சரண் ரெட்டி - கவிதா
இந்த நிலையில் தான் மதுவிலக்கு கொள்கை ஊழல் வழக்கில் அபிஷேக் ராவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த குறி கவிதா என்ற பேச்சு எழுந்துள்ளது. அபிஷேக் ராவ் மூலம் கவிதாவுக்கு எதிரான வாக்குமூலத்தைப் பெற சிபிஐ முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரண் ரெட்டியுடன் எம்எல்சி கவிதாவும் அடுத்த இலக்காக இருக்க வாய்ப்பு உள்ளது என டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன.

மகள் மூலம் தந்தைக்கு குடைச்சல்
கவிதா மூலம் மற்ற பிஆர்எஸ் தலைவர்களை நோக்கி விசாரணையை நகர்த்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவை தீவிரமாக விமர்சித்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் கேசிஆரை ஆஃப் செய்ய இதை ஆயுதமாக பாஜக பயன்படுத்தக்கூடும் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர். எனினும், இந்த வழக்கு, குற்றச்சாட்டு பற்றி கேசிஆர் மௌனம் காக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications