துண்டு துண்டாக வெட்டப்பட்ட சாரதா! கூலாக சுற்றிய கொலையாளி! பின்னணியில் மற்றொரு பெண்? போலீஸ் அதிரடி
டெல்லி: தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ள சாரதா படுகொலை சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் வழக்கைப் பல கோணங்களில் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.
வெறும் 26 வயதே ஆன சாரதா என்ற பெண் தலைநகர் டெல்லியில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். கடந்த மே மாதமே இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.
இருப்பினும், ஆறு மாதங்களுக்குப் பின் இப்போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லி படுகொலை
கொலை செய்யப்பட்ட சாரதா மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இவருக்கும் அப்தாப் அமீன் என்ற நபருக்கும் பிரபல டேட்டிங் செயலியான பம்பிள் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சீக்கிரமே அப்தாப் அமீனை சாரதா காதலிக்கத் தொடங்கி உள்ளார். இருவரும் முதலில் மகாராஷ்டிராவில் லிவ்-இன் உறவில் வாழ்ந்த நிலையில், கொஞ்சக் காலத்திலேயே அவர்கள் டெல்லிக்குச் சென்றுவிட்டனர். அங்கு தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.

கைது
கடந்த மே மாதம் சாரதாவைக் கொலை செய்த அமீன், பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். நாற்றம் வராமல் இருக்க அதை பிரிட்ஜில் வைத்திருந்த அமீன், கொஞ்சம் கொஞ்சமாக அதை வெளியே போட்டுள்ளான். தனது மகள் மாயமாகிவிட்டதாகச் சாரதாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் தான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அமீன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

விசாரணை
போலீசார் பல்வேறு கோணங்களில் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே டேடிங் செயலியில் அமீனின் நடவடிக்கை குறித்த தகவல்களை பம்பிள் நிறுவனத்திடம் பெற டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விரைவில் டேடிங் செயலி நிறுவனத்திற்கு டெல்லி போலீசார் தனியாகக் கடிதமும் எழுத உள்ளனர். இதே பம்பிள் செயலி மூலம் சாரதாவுக்கும் அப்தாப் அமீனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னணியில் மற்றொரு பெண்
அந்த செயலியில் அமீன் வேறு யாராவது பெண்ணை சந்தித்து இருக்கலாம். அந்த பெண்ணின் தூண்டுதலின் பெயரில் சாரதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே பம்பிள் செயலியில் இருந்து தரவுகளைப் பெற அவர்கள் முடிவு செய்துள்ளனர். பிரபல டேட்டிங் செயலியான பம்பிளின் தலைமையகம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது..

போலீசார்
இது குறித்து டெல்லி போலீசார் அதிகாரிகள் சிலர் கூறுகையில், "அமீன் சாரதாவை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து இருந்தான்.. அப்போதை அமீன் மற்ற பெண்களை அதே வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அந்த பெண்களின் தகவல்களைப் பெறத் தான் இப்போது முயன்று வருகிறோம். இந்தப் பெண்களில் யாராவது இந்த கொலைக்குக் காரணமாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்" என்றார்.

அப்தாப் அமீன்
அப்தாப் அமீன் மும்பையைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் அங்கு தான் வசித்து வருகின்றனர். பட்டதாரியான அப்தாப் அமீன் முதலில் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்துள்ளார். பின்னர், அதை விட்டு விட்டு புட் பிளாகிங் செய்துள்ளார். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே அவர் புட் பிளாகிங் குறித்து எந்தவொரு புதிய வீடியோவையும் பதிவிடவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.

சதி
கொலை செய்யும் சில நாட்களுக்கு முன்பு தான் அப்தாப் அமீன், இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் அப்தாப் அமீன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இது எதோ கோபத்தில் நடந்த கொலை இல்லை என்றும் அந்த பெண்ணை கொலை செய்ய அப்தாப் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரமும் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications