டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொக்கு மூக்கு மாஸ்க்கைத் திறந்தா.. தேன், வைப்பர் பவுடர், லவங்கம்.. அடேங்கப்பா.. அந்தக் காலமாச்சே!

Google Oneindia Tamil News

டெல்லி: புபோனிக் பிளேக் நோய் கொக்கு மூக்கு மாஸ்க் மூலம் 17ஆம் ஆண்டு காலத்து டாக்டர்கள் நோய் பரவலை எப்படி தடுத்தார்கள் என்ற தகவல்களை பார்ப்போம். எத்தனை மெனகெடல்களை செய்து நோயை பரப்பியுள்ளார்கள் என்பதை பார்க்கும் போது ஓல்டு இஸ் கோல்டு என்பதை மறுப்பதற்கில்லை.

கொரோனா எனும் தொற்றுநோயிலிருந்து தங்களை பாதுகாக்க மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்குகள், கிளவுஸ் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தினார்கள்.

ஆனால் அந்த காலத்தில் அதாவது 1347-ஆம் ஆண்டு மனித வரலாற்றில் மிகவும் மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த நோயிலிருந்து அந்த காலத்து மருத்துவர்கள் தங்களை காக்க எந்த மாதிரியான கவசங்களை பயன்படுத்தினர் என்பதை பார்ப்போம்.

இது மாஸ்க்கா.. இதுக்கு அந்த பிளேக் நோயே பரவாயில்லை போலயே.. பீதியை கிளப்பிய அந்த காலத்து டாக்டர்கள்!இது மாஸ்க்கா.. இதுக்கு அந்த பிளேக் நோயே பரவாயில்லை போலயே.. பீதியை கிளப்பிய அந்த காலத்து டாக்டர்கள்!

வைத்தியம்

வைத்தியம்

தொற்றுநோய்களுக்கு வைத்தியம் பார்க்கும் போது அவர்களிடம் இருந்து மூச்சுக் காற்று மூலம் பிளேக் நோய் பரவலை தடுக்க மெழுகினால் ஆன நீண்ட அங்கி, கையில் லெதர் கிளவுஸ், காலில் லெதர் பூட்ஸ், முகத்தில் பறவையின் அலகு போன்ற ஒன்றை மாஸ்க் போல் அணிந்திருந்தார்கள். இந்த கொக்கு மூக்கு மாஸ்க் எப்படி நோயிலிருந்து காத்தது தெரியுமா.

சென்ட்கள்

சென்ட்கள்

பொதுவாக வாசனை திரவியங்கள், சென்ட்கள், ஊதுவத்திகள் மூலம் கிருமிகள் கொண்ட காற்று நுழைவதை தடுக்க இந்த கொக்கு மூக்கு மாஸ்க்கள் அணியப்பட்டன. இந்த நீண்ட மூக்கு மாஸ்க்கில் ஒரு கலவையை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதாவது வைப்பர் பவுடர், தேன், இலவங்கப்பட்டை, பாம்பு விஷ முறிவு உள்ளிட்ட 55 மூலிகைகள் கொண்டிருக்கும்.

வடிகட்டும் தன்மை

வடிகட்டும் தன்மை

இந்த மூலிகை கலவை கெட்ட காற்றை வடிகட்டும் தன்மை கொண்டதால் அது போன்ற பெரிய மூக்கை மாஸ்க்காக பயன்படுத்தினர். இந்த மூலிகைகள் மூலம் கெட்ட காற்று சுத்தப்படுத்தப்பட்டு மூக்கு, நுரையீரல் பாதிப்பை தடுக்கும். இது 17ஆவது நூற்றாண்டில் சார்லஸ் டீ லோர்ம் என்ற மருத்துவர் கண்டறிந்தார்.

Recommended Video

    Bubonic plague சீனாவில் அடுத்த தொற்றுநோய்? மக்களுக்கு எச்சரிக்கை
    காரணம் என்ன

    காரணம் என்ன

    பிளேக் நோய் ஏற்படுவது எப்படி என்பது குறித்து காரணம் கிட்டதட்ட 3 மிகப் பெரிய தொற்றுநோய்களுக்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பிளேக் நோய்கள் கெட்ட காற்றால் பரவாது என கண்டுபிடிக்கப்பட்டது. இவை யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற ஒரு வகை பாக்டீரியாவாலும் ஒரு வகை ஈக்களாலும் பரவுகிறது. இந்த பிளேக் கெட்டு போன திரவம், திசுக்கள், நிமோனிக் பிளேக் கொண்ட மக்கள் இருமும்போதும் தும்மும் போதும் வெளியாகும் நீர் துளிகளிலிலிருந்தும் பரவுகிறது.

    English summary
    Why did Bubonic Plague treating doctors uses beak shaped masks? Here are the fine reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X