முதலிடம்.. உலகில் செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி மாறியது எப்படி? பின்னணி இதுதான்
டெல்லி: உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் ‛மார்னிங் கன்சல்ட்' சர்வேயில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எப்படி முதலிடம் பிடித்தார்? என்பது பற்றிய அசத்தலான காரணம் வெளியாகி உள்ளது.
‛மார்னிங் கன்சல்ட்' எனும் அரசியல் உளவு நிறுவனம் பல்வேறு தரவுகள் குறித்த விபரங்களை வழங்கி வருகிறது. இதற்காக அவ்வப்போது அந்த நிறுவனம் உலகம் முழுவதும் சர்வே மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 வரை ஒவ்வொரு நாட்டில் உள்ள தலைவர்களுக்கும் அந்த நாட்டில் உள்ள தலைவர்களுக்கான செல்வாக்கு தொடர்பாக ‛மார்னிங் கன்சல்ட்' எனும் சர்வே மேற்கொண்டது. இந்த சர்வேயின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி முதலிடம்
இதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டில் 75 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2022 ஜனவரி மற்றும் 2021 நவம்பரில் வெளியான பட்டியலிலும் முதலிடம் பிடித்த நரேந்திர மோடி தற்போது 3வது முறையாக மீண்டும் முதலிடம் பெற்று ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளார். மேலும் உலகளவில் செல்வாக்கு மிகுந்த தலைவராக நரேந்திர மோடி மாறியுள்ளார்.

ஜோ பிடனுக்கு 5வது இடம்
மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 2வது இடத்தில் உள்ளார். இவருக்கு அந்நாட்டு மக்கள் 63 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகியும் 54 சதவீத ஆதரவுடன் உள்ளார். பிரேசில் அதிபர் போல்சனாரோ 42 சதவீத மக்கள் ஆதரவுடன் 4ம் இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 41 சதவீத ஆதரவுடன் 5வது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீதத்துடன் 6வது இடத்தையும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 38 சதவீதத்துடன் 7 வது இடத்திலும் உள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 38 சதவீத ஆதரவுடன் 8 வது இடத்திலும் உள்ளனர்.

மோடி முதலிடம் பிடிக்க காரணம் என்ன?
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி எப்படி முதலிடம் பிடித்தார் என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனா பரவலை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். குறிப்பாக உலக மக்கள்தொகையில் 2வது இடத்தில் இருந்தாலும் அவரது செயல்பாட்டை மக்கள் அதிகமாக பாராட்டி நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் தான் கருத்து கணிப்பில் அதற்கு எதிர்மாறான கருத்தை மக்கள் தெரிவித்துள்ளனர்.

சரியான திசையில்...
மேலும் 72 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை சரியான திசைக்கு அழைத்து செல்கிறார்கள் என கருத்து கணிப்பில் கூறியுள்ளனர். கொரோனா காலத்தில் உலக நாடுகள் அதிக சிரமத்தை சந்தித்தாலும் கூட பிரதமர் மோடி அரசு சரியான வகையில் செயல்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு பின்னடைவு ஏன்?
மேலும் இந்த கருத்து கணிப்பின் படி உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை விஷயத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மன் பிரதமர் சான்ஸ்லர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோரின் மதிப்பீடுகளை குறைத்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட சிரமமும் அந்நாட்டு மக்களிடம் அவர்களின் மதிப்பை குறைத்துள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளன.

சர்வே நடந்தது எப்படி?
இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருக்கும் அரசு குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் இந்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம் டேட்டா சேகரித்துச் செய்து வருகிறது. தற்போது நடந்து முடிந்த சர்வேயின்படி தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இதில் அனைத்து வயதினரும் அடங்குவர். இந்த கணக்கெடுப்பில் அமெரிக்காவில் 45 ஆயிரம் பேரும் பிற நாடுகளில் 500 முதல் 5000 பேரும் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டிலும் வயது, பாலினம், பிராந்தியம் அடிப்படையில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் இனரீதியாகவும் சர்வே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications