இதுதான் இந்தியாவின் "பவர்".. பொருளாதார தடை போட அமெரிக்கா மறுப்பு.. பதுங்கும் பிடன்? என்ன காரணம்?
டெல்லி: ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை கட்டுப்பாடுகளை இந்தியா மீறவில்லை என்று அமெரிக்காவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு எதிர்பார்த்த ஒன்று என்றாலும்.. இந்த முடிவுக்கு பின் பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளன.
Recommended Video
ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து இருக்கும் அதே வேளையில், ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்க மாட்டோம் என்று அமெரிக்கா கூறி உள்ள அதே வேளையில்தான் இந்தியா ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய்யை வாங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவிற்கு ரஷ்யா குறைந்த விலையில் தள்ளுபடியோடு எண்ணெய் தருவதாக கூறிய நிலையில்தான் இந்தியா கூடுதல் எண்ணெய்யை வாங்க முடிவு செய்துள்ளது. இந்தியன் ஆயில் மூலம் எண்ணெய்யை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா மீது தடையில்லை
ரஷ்யா மீது பொருளாதார தடை இருக்கும் போது இந்தியா இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. பொருளாதார தடைகள் தம் மீதும் பாயும் என்ற அச்சம் இல்லாமல், மேற்கு உலகை எதிர்க்க வேண்டி வரும் என்று கவலைப்படாமல் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதை பற்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் ப்சகி அளித்த பேட்டியில், இந்தியாவின் செயல்பாடு அமெரிக்கா விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது. அமெரிக்கா போட்டு இருக்கும் பொருளாதார தடைகளுக்கு எதிரானது இது என்று சொல்ல முடியாது. இந்தியா விதிகளை மீறுவதாக நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் .

சீனா மீது மிரட்டல்
அதாவது இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து கவலையின்றி இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியும். அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய எண்ணெய்யை இந்தியா வாங்கிக்கொள்ள முடியும். இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ள அதே நிலையில்தான் சீனா மீது பொருளாதார தடைகளை விதிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனாவே ஒதுங்கும்
ரஷ்யாவிற்கு ராணுவ ரீதியா உபகரணங்களை அனுப்பினால் கண்டிப்பாக சீனா மீது நடவடிக்கை எடுப்போம். அதேபோல் ரஷ்யாவுடன் மேலும் நெருக்கமான உறவை மேற்கொண்டால் சீனா மீது பொருளாதார தடைகள் பாயும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் இதுபற்றி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீனா ஒரு போதும் ரஷ்யாவிற்கு உதவி செய்ய நினைக்க கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஷ்யாவிற்கு உதவ சீனா முயல கூடாது.

கடும் எச்சரிக்கை
அப்படி செய்யும் பட்சத்தில் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அது தவறான முடிவாக இருக்கும். இதை பற்றி சீனாவிடம் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மீறி சீனா ஏதாவது உதவி செய்யும் பட்சத்தில் சீனா மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் சீனாவே ரஷ்யாவை ராணுவ ரீதியாக ஆதரிக்கும் முடிவை கொஞ்சம் கொஞ்சமாக பரிசீலிக்க தொடங்கி உள்ளது.

ஏன் இந்தியா இல்லை?
சீனாவை இப்படி கடுமையாக மிரட்டும் அமெரிக்கா ஏன் இந்தியாவை மிரட்டுவது இல்லை. இந்தியாவை சாப்ட்டாக மட்டும் கண்டிப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
காரணம் 1 - சீனாவின் ரஷ்ய ஆதரவும் , இந்தியாவின் ரஷ்ய சார்பும் ஒன்று அல்ல. இந்தியா தேவை கருதியே ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகிறதே தவிர சீனா போல மேற்கு உலகை இந்தியா எதிர்க்கவில்லை.
காரணம் 2 - இந்திய ரஷ்ய ஆதரவை வெளிப்படையாக எடுக்கவில்லை. மாறாக நடுநிலையோடு இருக்கவே இந்தியா விரும்புகிறது. அப்படி இருக்கும் போது இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க முடியாது.

மற்ற காரணங்கள்
காரணம் 3 - ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவிற்கு மட்டும் தடை போட முடியாது.
காரணம் 4- இந்திய மார்க்கெட் முக்கியம். மேற்கு உலக நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இப்போது இந்தியா நட்பு நாடுதான். எதிர்காலத்தில் சீனாவின் வளர்ச்சியை தடுக்க இந்தியா தேவை என்பதால் இந்தியா மீது அமெரிக்க அத்தனை எளிதாக தடைகளை போட முடியாது.
இதை பயன்படுத்தியே இந்தியா உக்ரைன் - ரஷ்ய போரில் பவர் புல் நிலைப்பாடுகளை வரிசையாக எடுத்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications