சீனாவில் எகிறும் கேஸ்கள்.. இந்தியாவில் 4ஆவது அலை தீவிரமடையுமா.. நிபுணர்கள் சொல்வது என்ன?
டெல்லி: இனி வரும் கொரோனா அலைகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை முடிவுக்கு வரும் நிலை உள்ளது. காரணம் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா அலை தீவிரமடைந்து வருகிறது.
சீனா, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் 4 ஆவது அலை என சொல்லப்படுகிறது. இதனால் இந்தியாவிலும் 4-ஆவது அலை பாதிப்புக்குள்ளாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்று நோயியல் துறை நிபுணர் சஞ்சய் ராய் கூறுகையில் இந்தியா மிகவும் அழிவுகாரமான 2ஆவது அலையை சந்தித்தது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதுவே நமது பலம். ஏனென்றால் இயற்கை தொற்று நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் தடுப்பூசி பாதுகாப்பு உள்ளது.

கொரோனா அலை
எனவே எதிர்கால கொரோனா அலைகளின் கடுமையான தாக்கம் சாத்தியம் இல்லை. எனவே கட்டாய முக கவச உத்தரவை தளர்த்த அரசு பரிசீலிக்கலாம் என்றார். இதுகுறித்து சந்திரகாந்த் லஹரியா (தொற்றுநோயியல் நிபுணர்) கூறுகையில் ஓமிக்ரான் பரவல் பற்றிய செரோ சர்வே, தடுப்பூசி பாதுகாப்பு உள்ளிட்ட தரவுகளை நாங்கள் ஆராய்கிற போது இந்தியாவில் கொரோனா முடிந்துவிட்டது என்று முடிவு செய்வது தர்க்கரீதியானது.

கட்டாய முகக் கவச உத்தரவு
எனவே பல மாதங்களுக்கு புதிய எழுச்சிக்கோ, புதிய உருமாறிய கொரோனாவுக்கோ வாய்ப்பு மிகவும் குறைவு. கட்டாய முகக் கவச உத்தரவை தளர்த்தலாம் என்றார். இதுகுறித்து கோவிட் பணிக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறுகையில் அதிக தடுப்பூசி பாதுகாப்பு பரவலான நோய் பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தியா கடுமையான அலைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

2 தடுப்பூசி டோஸ்
ஆனால் புதிய உருமாற்றங்களுக்கு வாய்ப்பு எப்போதும் இருப்பதால், அதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது. 2ஆவது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். 18 வயது வரையிலானவர்களும் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டு முடித்துவிட வேண்டும் என தெரிவித்தனர். இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications