பாலிவுட் பாடலுக்கு கையசைத்த அந்த பெண்ணை நினைவிருக்கா?.. உயிரை பறித்த கொரோனா.. கலங்கடிக்கும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க்கோடு.. சிரித்தபடி.. பலருக்கும் நம்பிக்கையை விதைத்த இளம் பெண் ஒருவர் டெல்லியில் கொரோனாவிற்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க்கோடு.. காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் உற்சாகமாக இருக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலானது. டியர் ஜிந்தகி என்ற இந்தி படத்தில் வரும் லவ் யூ ஜிந்தகி பாடலுக்கு அந்த பெண் கைகளை அசைத்தபடி லேசாக உட்கார்ந்தபடியே நடனமாடினார்.

கொரோனா தாக்கப்பட்டு, ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், அந்த பாடல் கேட்டு, இவர் லேசாக நடனமும் ஆடியது இணையத்தில் பலரையும் கவர்ந்தது.

மரணம்

மரணம்

30 வயதான பெயர் வெளியிடப்படாத அந்த பெண் டெல்லியை சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இவர் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் உதவியோடு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஐசியூ

ஐசியூ

ஐசியூவில் இடம் கிடைக்காத நிலையில் சாதாரண வார்டில் இந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் அனுமதியது அந்த பெண் பாடல்களை கேட்டு, தனது கவனத்தை திசை திருப்பி இருக்கிறார். முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டிக்கொண்டு இவர் பாடலுக்கு கை அசைத்த அழகான வீடியோ இணையம் முழுக்க வைரலாகி, மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

குணமடைய வேண்டும்

இவர் உடனே குணமடைய வேண்டும், நீங்கள் நம்பிக்கையின் அடையாளம் என்று பலர் இணையத்தில் வேண்டியபடி இருந்தனர். இந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மோனிகா லாங்கேவும் இந்த வீடியோவை பகிர்ந்து, இந்த பெண் மனரீதியாக வலிமையான பெண், இவருக்காக இவரின் குழந்தை வீட்டில் காத்து இருக்கிறது. இவர் விரைவில் குணமடைவார் என்று நம்புவோம், ஐசியூ படுக்கைக்காக காத்திருக்கிறோம், என்று டிவிட் செய்து இருந்தார்.

மரணம்

இந்த நிலையில் அந்த வீடியோவில் வைரலான பெண்ணின் உடல்நிலை மோசமாகவே, ஐசியூவில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஐசியூவில் சேர்த்தும் அவரின் உடல்நிலை மோசமாகி உள்ளது. அங்கு அவருக்கு 2 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் பலியாகிவிட்டதாக மருத்துவர் மோனிகா லாங்கே டிவிட் செய்துள்ளார்.

கொடூரம்

கொடூரம்

தைரியமான ஆன்மாவை நாம் இழந்துவிட்டோம் என்று மருத்துவர் மோனிகா லாங்கே இந்த பெண்ணை குறித்து டிவிட் செய்துள்ளார். இவரின் மரணம் இணையத்தில் பலரை உலுக்கி உள்ளது. முக்கியமாக அந்த வீடியோவை ஷேர் செய்து, நம்பிக்கையாக பேசி வந்த பலர், இந்த பெண்ணின் மரண செய்தி கேட்டு உடைந்து போய் உள்ளனர். இணையத்தில் பலரும் இந்த பெண்ணுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+