டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் யாஸ்.. அதன் அர்த்தம் என்ன?.. யார் வைத்த பெயர்?

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் புயலாக மாறினால் அதற்கு யாஸ் என பெயரிடப்படவுள்ளது. இந்த பெயரை ஓமன் நாடு பரிந்துரைத்தது.

Recommended Video

    வங்கக் கடலில் உருவாக இருக்கும் Yaas புயல்.. தமிழகத்தை தாக்குமா?

    வங்கக் கடல், அரபிக் கடல்களில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய 13 நாடுகள் பெயர் வைத்து வருகின்றன.

    சமூக ஆணையம்

    சமூக ஆணையம்

    ஒவ்வொரு நாடும் 13 பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை வழங்கும். 2000ஆம் ஆண்டு உலக வானிலை நிறுவனம் மற்றும் ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஒப்புதல் கொடுத்துவிட்டது.

    அகரவரிசை

    அகரவரிசை

    இதற்கான குழு, நாடுகளின் அகரவரிசைப்படி , அவை பரிந்துரைத்த பெயர்களை பட்டியலிடும். அரபிக் கடல், வங்கக் கடல், வடக்கு இந்திய பெருங்கடல் ஆகியன ஆண்டுக்கு 5 புயல்களை சந்திக்கின்றன. புதிதாக தயாரிக்கப்பட்ட புயல்களின் பெயர் பட்டிலை வைத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்படும் புயல்களுக்கு பெயர்களை வைத்து கொள்ளலாம்.

    புயல்

    புயல்

    வங்கக் கடலில் வரும் மே 23 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயலுக்கு யாஸ்

    புயலுக்கு யாஸ்

    இவ்வாறு புயலாக மாறினால் இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்படும். இந்த பெயரை ஓமன் நாடு பரிந்துரைத்துள்ளது. யாஸ் என்ற ஓமன் மொழியில் அதிருப்தி , விரக்தி, ஏமாற்றம் என பொருள். இந்த புயல் தமிழகத்தை பாதிக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Yaas will be named if new cyclone formed in Bay of Bengal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X