அமித் ஷா உடன் நடந்த முக்கிய சந்திப்பு.. விவாதிக்கப்பட்டது என்ன? உண்மையை போட்டுடைத்த எடியூரப்பா
டெல்லி: உள் துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது ராஜினாமா குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் கட்நாடக சட்டசபை தேர்தல் குறித்தும் 2024இல் நடைபெறும் மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசித்ததாகக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக சில மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசு நிர்வாகத்தில் எடியூரப்பாவின் மகன் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் டெல்லியில் டென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா சந்திப்பு
எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அது பற்றியே அமித் ஷா உடன் விவாதித்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சராகக் கூடுதலாகப் பொறுப்பேற்றுள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அடுத்து நடைபெறும் மக்களவை தேர்தல், கர்நாடக மற்றும் உபி சட்டசபைத் தேர்தல் ஆகியவை குறித்தும் விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை அமைக்கக் கடுமையாக உழைக்கும்படி அமித் ஷா கேட்டுக் கொண்டார். அதேபோல மக்களவை தேர்தலிலும் அதிகப்படியான இடங்களில் வெல்ல வேண்டும் என்றும் சொன்னார். பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் பாஜக நிச்சயம் 100% வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அமித் ஷா என்னிடம் சொன்னார்" என்று அவர் கூறினார்.

வலுப்படுத்த வேண்டும்
மேலும் கர்நாடகாவில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அமித் ஷா தன்னை கேட்டுக் கொண்டதாக எடியூரப்பா தெரிவித்தார். கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எடியூரப்பா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா
ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல் குறித்துப் பேசிய எடியூரப்பா, "இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சில அமைச்சர்கள் கிளப்பிவிட்டிருக்கும் இதுபோன்ற வதந்திகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. கட்சித் தலைமை எப்போது என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறதோ, அப்போது நான் ராஜினாமா செய்வேன்" என் தெரிவித்தார்.
-
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications