டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேப்டன் கூல், உலகின் சிறந்த டிரைவர் நீங்கதான்.. யானையிடம் தப்பியவரை பாராட்டி ஆனந்த் மகிந்திரா ட்விட்

Google Oneindia Tamil News

டெல்லி: வனப்பகுதிக்குள் சென்றுகொண்டிருக்கும் கார் ஒன்றை யானை விடாமல் துரத்தி செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, அந்த டிரைவரை 'கேப்டன் கூல்' என வர்ணித்து போஸ்ட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாடறிந்த தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

மகிந்திரா குழுமங்களுக்கு சொந்தமான இவர் தன்னம்பிக்கையூட்டும் வீடியோக்கள், வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிருவதை வாடிக்கையாக கொண்டவர்.

4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த 4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த

ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா

இவருடைய பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் டிரெண்ட் ஆகிவிடும். அசாத்திய திறமையுடன் கூடிய செயல்கள், வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் அதை செய்பவர்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிரும் ஆனந்த் மகிந்திரா, அத்தகைய வீடியோக்களை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தி விடுவார். அந்த வகையில் தான் தற்போது ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டில் பதிவிட்ட ஒரு வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டாகி வேகமாக பரவிக் வருகிறது.

காரை துரத்தும் யானை

காரை துரத்தும் யானை


36 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் வனவிலங்குகள் சரணாலயம் போல தென்படும் ஒரு வனப்பகுதிக்குள் பொலிரோ வாகனம் ஒன்றை யானை ஒன்று துரத்துகிறது. யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை வேகமாக டிரைவர் ஓட்டுகிறார். இதில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா... யானை அவரது காரை பின்னால் இருந்து துரத்தவில்லை. மாறாக காருக்கு நேர் எதிரில் இருந்து துரத்துகிறது. ஆனாலும் பதறாத அந்த டிரைவர் காரை சாமர்த்தியமாக பின்னோக்கி வேகமாக இயக்குகிறார்.

கேப்டன் கூல்

கேப்டன் கூல்

அந்த பொலிரோ காரில் 3க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். யானை வேகமாக துரத்துகிறது. ஆனாலும் அசராத டிரைவர் ரிவர்சில் துல்லியமாகவும், வேகமாகவும் சென்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது முயற்சியை கைவிடும் யானை அப்படியே வனப்பகுதிக்குள் செல்கிறது. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, ''பதற்றமான தருணத்திலும் சாதுர்யமாக செயல்பட்டு யானையிடம் இருந்து தப்பித்த அந்த டிரைவரை, 'கேப்டன் கூல்' என வர்ணித்துள்ளார். மேலும், சந்தேகமே இன்றி உலகின் சிறந்த போலிரோ டிரைவர் இவர்தான்'' எனவும் கேப்ஷனாக போட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

ஆனந்த் மகிந்திரா பதிவிட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் பார்வையளர்களை கடந்து வைரல் ஹிட் அடித்து வருகிறது. நெட்டிசன்களும் இந்த பதிவுக்கு கீழே டிரைவரின் அசாத்திய திறமை மற்றும் துணிச்சலை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், சூழ்நிலைகள் நம்மை கைவிட்டாலும் பதற்றம் இன்றி செயல்பட்டு தப்பிப்பது எப்படி என்பதை நமக்கு அந்த டிரைவர் காட்டியிருக்கிறார் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன்.. யானையிடம் இருந்த தப்பித்த டிரைவர் மிகவும் அதிர்ஷ்டசாலி... டிரைவரின் துரிதமான செயல் அவர்களை காப்பாற்றியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Anand Mahindra, who has posted a video of an elephant chasing a car going into the forest, has described the driver as 'Captain Cool'. Now this video is going viral on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X