Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரசுக்கு புத்துயிரூட்ட ராகுல் காந்தி பிளான்.. கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி இணைய வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவருமான கன்ஹையா குமார், காங்கிரஸ் சீனியர் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் கன்ஹையா குமார், காலடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதவி செய்த காங்கிரஸ்

உதவி செய்த காங்கிரஸ்

கடந்த சட்டசபை தேர்தலில் மேவானி குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. அவரது வெற்றிக்கு ஒரு வகையில் காங்கிரசும் உதவியது.
கன்ஹையா குமார் தற்போதுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிடிப்பு இல்லாமலும், ஒத்துழைப்பு இல்லாமலும் இருப்பதால் காங்கிரசுக்கு வர முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான், அவர் ராகுல் காந்தியைச் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி

கம்யூனிஸ்ட் கட்சி

கன்ஹையா குமார், கட்சியை விட்டு வெளியேறுகிறாரா என்று ​​சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜாவிடம் நிருபர்கள் கேட்டபோது, இது தொடர்பாக ஊகங்கள் மட்டுமே சுற்றி வருவதாகவும், இந்த மாத தொடக்கத்தில் எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கன்ஹையா குமார் பங்கேற்றார் என்றும் ராஜா கூறியுள்ளார்.

பீகார் அரசியல்

பீகார் அரசியல்

பீகார் அரசியலில் கன்ஹையா குமார் முக்கிய பங்கு வகிக்க ஆர்வமாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 20 வருடங்களாக பீகாரில் காங்கிரஸ் திக்கற்று போய் விட்டது. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கூட, கூட்டணி கட்சிகளான ஆர்ஜேடி மற்றும் சிபிஐ (எம்எல்) உடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் மோசமாக செயல்பட்டது. காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆர்ஜேடி போட்டியிட்ட 144 இடங்களில் பாதிக்கும் மேல் வெற்றி பெற்ற நிலையில், சிபிஐ (எம்எல்) 19 இடங்களில் 12 இடங்களில் வெற்றி பெற்றது.

இளம் தலைவர்

இளம் தலைவர்

காங்கிரஸில் கன்ஹையா குமார் மற்றும் மேவானி இணைந்தால் அது, புது உத்வேகத்தை அளிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களில் பல இளம் தலைவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டனர். ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதற்கு முன் பலமுறை ராகுல் காந்தியுடன் கன்ஹையா குமார் சந்தித்திருந்தாலும், இப்போதைய சந்திப்பு கட்சித் தாவலுக்கான விதை என்று கூறப்படுகிறது. இருவரும் சில மணி நேரங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி இந்த யூகங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.

உத்தர பிரதேச தேர்தல்

உத்தர பிரதேச தேர்தல்

பேச்சாற்றலுக்கு பெயர் பெற்றவர் கன்ஹையா குமார் என்பதால், அவர் காங்கிரசில் சேர்ந்தால், பீகார் மட்டுமல்லாது, உத்திரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வாக்குகளை ஈர்க்க முடியும் என்று காங்கிரஸ் மேலிடமும் கணக்குப் போடுகிறது.

 பேச்சாற்றல்

பேச்சாற்றல்

2016ம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள் அப்பல்கலைக்கழக மாணவர்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதில் ஒருவர் கன்ஹையா குமார். இதன்பிறகு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் முன்னணியில் இருந்தார். இவரது உரைக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. தனது பேச்சால் அனைவரையும் கட்டிப்போடும் திறன் கொண்டவராக இருந்தார். ஜிக்னேஷ் மேவானி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞராகும். குஜராத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அம்மக்களை திரட்டி நடத்திய போராட்டத்தால் அனைவராலும் கவனிக்கவைத்தவர். இவருக்கு 38 வயதுதான் ஆகிறது. இந்த இரு இளம் தலைவர்களும்தான் காங்கிரசில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+