என்ன பீட்சானு சூஸ் பண்ற நேரத்தை விட குறைந்த நேரத்தில் கம்பெனிகளை வாங்கும் மஸ்க்.. ஜொமாட்டோ ட்வீட்
டெல்லி: என்ன பீட்சா வாங்க வேண்டும் என முடிவெடுக்கும் நேரத்திற்கும் குறைவான நேரத்தில் எலான் மஸ்க் நிறுவனங்களை வாங்குவது குறித்து முடிவெடுக்கிறார் என சொமாட்டோ நகைச்சுவையாக ட்வீட் போட்டுள்ளது.
டெஸ்லா, ஸ்டார்லிங்க், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ளவர் எலான் மஸ்க். உலக கோடீஸ்வரர்களில் முதன்மை இடத்தில் உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் ட்விட்டரில் கருத்து பதிவிட குறைந்த எழுத்துகளே உள்ளதால் கருத்து சுதந்திரம் இல்லாமல் இருப்பதாக எலான் மஸ்க் விமர்சனம் செய்திருந்தார்.

தனியுரிமை
தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது என்றும் எலான் மஸ்க் தனது விமர்சனத்தை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் ட்விட்டரின் முழு பங்குகளையும் வாங்குவதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள போர்ட் ஆப் டைரக்டர்களுடன் எலான் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று இரவு இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து டிவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். இதையடுத்து ட்விட்டர் அவர் வசமானது. கார் நிறுவனம், விண்வெளி நிறுவனம், இணையதள நிறுவனம் ஆகியவற்றுடன் தற்போது சமூகவலைதளமான ட்விட்டரையும் எலான் மஸ்க் தனதாக்கிக் கொண்டார்.
Recommended Video

ட்விட்டர் நிறுவனம்
இந்த நிலையில் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் போட்ட முதல் ட்வீட்டில் ஜனநாயகத்தின் அடிதளமே கருத்து சுதந்திரம்தான் என தெரிவித்திருந்தார். மேலும் ட்விட்டரில் பல மாற்றங்களை செய்யவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எலான் மஸ்கிற்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஜொமாட்டோ ட்வீட்
இதுகுறித்து ஜொமாட்டோ நிறுவனம் ஒரு ட்வீட் போட்டுள்ளது. அதில் என்ன பீட்சா வாங்க வேண்டும் என நான் முடிவு செய்யும் நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நிறுவனங்களை வாங்குவது குறித்து முடிவெடுக்கிறார் எலான் மஸ்க் என நகைச்சுவையாக ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications