தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'வார்டன்னா அடிப்போம்'.. எகிறிய 'கரண்ட் பில்'.. சம்பந்தமே இல்லாமல் மின் பொறியாளரை வெளுத்த இளைஞர்

Google Oneindia Tamil News

தர்மபுரி: தனது வீட்டுக்கு மின் கட்டணம் அதிகமாக வந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், தங்கள் பகுதிக்கு சம்பந்தமே இல்லாத மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று பொறியாளரை தாக்கிய சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், தாக்குதல் நடத்திய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மின்வாரிய அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், தனது வீடு இருக்கும் பகுதிக்கு சம்பந்தமே இல்லாத மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அந்த இளைஞர் தாக்குதல் நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

மாதவரத்தில் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை.. 'காதலனை ஒன்றும் செய்யாதீர்கள்'..உருக்கமான வீடியோ மாதவரத்தில் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை.. 'காதலனை ஒன்றும் செய்யாதீர்கள்'..உருக்கமான வீடியோ

உயர்த்தப்பட்ட மின் கட்டணம்

உயர்த்தப்பட்ட மின் கட்டணம்

நாடு தழுவிய அளவில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை ஈடுகட்டும் வகையில் தமிழகத்தில் அண்மையில் மின்சாரக் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. இதற்காக மின் கட்டணம் அளவிடும் முறையிலும் மாறுதல் கொண்டு வரப்பட்டது. இதன்படி, கடந்த காலங்களை போல மின்சாரப் பயன்பாடு இருந்தால், அவர்களுக்கு மின் கட்டணம் இரட்டிப்பாகும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது பெரும்பாலான வீடுகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட முறைப்படி, அதிக அளவிலான மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் சம்பந்தப்ட்ட

அதிகமாக வந்த 'கரண்ட் பில்'

அதிகமாக வந்த 'கரண்ட் பில்'

இந்நிலையில், தனக்கு கரண்ட் பில் அதிகமாக வந்ததால் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று இளைஞர் ஒருவர் கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தண்டுக்காரனஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் விநாயக மூர்த்தி (33). இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு எந்த அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என 'ரீடிங்' எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை ஊழியர்கள் தெரிவித்துவிட்டுச் சென்றனர். அதில், இதற்கு முன்பு அவர்கள் கட்டி வந்ததை விட அதிக அளவில் மின் கட்டணம் இருந்துள்ளது.

கொந்தளித்த இளைஞர்

கொந்தளித்த இளைஞர்

இந்த சூழலில், வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய விநாயக மூர்த்தி மின் கட்டண அட்டையை பார்த்துள்ளார். மின்சாரக் கட்டணம் அதிகமாக இருப்பதை பார்த்த விநாயக மூர்த்தி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து கேட்பதற்காக பாலக்கோடில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு விநாயக மூர்த்தி நேற்று சென்றார். அப்போது தனது வீட்டுக்கு எப்படி இவ்வளவு அதிகமாக மின் கட்டணம் வந்தது எனக் கேட்டு அங்கிருந்தவர்களிடம் அவர் தகராறு செய்தார்.

சம்பந்தம் இல்லாத அலுலவகத்தில் தகராறு

சம்பந்தம் இல்லாத அலுலவகத்தில் தகராறு

அப்போது அவரது மின் கட்டண அட்டையை வாங்கி பார்த்த அங்கிருந்த அதிகாரிகள், உங்கள் வீடு இருக்கும் பகுதி, எங்கள் மின் கோட்டத்தின் கீழ் வராது எனக் கூறியுள்ளனர். ஆனால் அதை சட்டை செய்யாத விநாயக மூர்த்தி, இளநிலை மின் பொறியாளர் சசிகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்த ஊழியர் ஒருவர், தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த தாக்குதலை நடத்திய விநாயக மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் மின்வாரிய அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

English summary
Shocking incident in Dharmapuri, A man attacked EB junior engineer as he recieved high current bill. But his house not come under the eb office control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X