தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 மாசத்துக்கு முன்னாடி தெரியும்! ரஜினி பொறுப்பானவர்..நல்லது கெட்டது அவருக்கு தெரியும்! அன்புமணி பளீர்

Google Oneindia Tamil News

தருமபுரி : 2026ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாமக கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் எனவும், அதற்கெற்ப வியூகங்களை வரும் நடாளுமன்ற தேர்தலில் அமைப்போம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொம்மிடியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்திலின் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்து திருமணத்தை நடத்தி வைத்தா்ர்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது," தருமபுரி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முதன்மை பிரச்சினையாக உள்ள ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்து கொண்டு வருகிறோம்.

தைலாபுரத்துக்கு கேட்டுச்சா.. திமுகவை மட்டுமல்ல.. விசிகவையும் நெருங்கி வருகிறது பாமக: ஆளூர் ஷாநவாஸ்தைலாபுரத்துக்கு கேட்டுச்சா.. திமுகவை மட்டுமல்ல.. விசிகவையும் நெருங்கி வருகிறது பாமக: ஆளூர் ஷாநவாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இத்திட்டத்தை நிறைவேற்ற கோரி 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி பல போராட்டங்களை நடத்தினோம். ஆனால் தற்போது வரை இந்தத் திட்டமானது செயல்படுத்தப்படவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தர்மபுரி மாவட்டத்தில் 80 சதவீத விழுக்காடு விவசாயம் வளம் பெரும். விரைவில் இத்திடத்தை துவங்க வேண்டும். மொரப்பூர் - தருமபுரி ரயில்வே இணைப்பு சம்பந்தமாக பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் அமைச்சரை சந்தித்து ரயில்வே திட்டத்தைப் பற்றி வலியுறுத்தவுள்ளேன்

திமுக அரசு

திமுக அரசு

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் தனியார் தொழிற்சாலையில் 80 விழுக்காடு வேலைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குன நாங்கள் கொடுப்போம் அதற்கு சட்டத்தை கொண்டு வருவோம் என உறுதிமொழி கொடுத்தனர். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் சட்டம் இயற்றப்படவில்லை ஆகையால் அவர்கள் வாக்குறுதி கொடுத்த அந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். மேலும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும், அடுத்த கல்வி ஆண்டில், 10.5 சதவீத இடஒதுக்கிடு நிறைவேறும் என நம்புகிறோம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினி நடித்த பாபா படம் ரஜினியின் பிறந்தநாள் அன்று மறுபடியும் வெளியாக உள்ள நிலையில் அதில் மது மற்றும் புகை பிடிப்பது தொடர்பாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன இதுகுறித்து பாமகவின் நிலைப்பாடு என்ன என்ற கேட்கிறீர்கள். பாபா படத்தில் மட்டும் தான் அந்த விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதா மற்ற எந்த படத்திலும் அந்த மாதிரியான காட்சிகள் இடம் பெறவில்லையா மற்ற படம் எல்லாம் புத்தர் சம்பந்தமான படமா நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் சமுதாய பொறுப்புணர்வு கடமை உணர்வு அதிகம் உடையவர்

பாமக கூட்டணி

பாமக கூட்டணி

எது நல்லது கெட்டது என எல்லாம் அவருக்கு நன்றாக தெரியும். எது தவிர்க்க வேண்டும். எது தவிர்க்கக் கூடாது என்கிற கடமை உணர்வு எல்லாம் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியும். வரும் 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாமக கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கெற்ப வியூகங்களை வரும் நடாளுமன்ற தேர்தலில் அமைப்போம் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் எங்களது முடிவை அறிவிப்போம்" கூறினார்.

English summary
Patali Makkal katchi leader Anbumani Ramadoss has said that we will form a coalition government under the leadership of the pmk in the Assembly elections to be held in 2026, and we will formulate strategies for the coming parliamentary elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X