மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் எப்போது முடியும்.. சௌமியா அன்புமணி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் குடிநீர், சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் என சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்

தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் மக்கள் குறைகள் குறித்தும் எடுத்துரைத்து அதை உடனடியாக நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்

When will the Morappur Dharmapuri railway project be completed Soumya Anbumani explains

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி, தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை அதிகளவில் உள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருக்கிறது, சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளேன், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சனத்குமார் நதியில் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்த பின்னரே கால்வாயில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். அதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை பணிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும், அதன் பின்னர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கப்பட்டு திட்டம் நிறைவடையும். தர்மபுரியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குடிநீர் வழங்க வேண்டும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன். பல்வேறு அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளது. அந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மணி வலியுறுத்தினார். தமிழகத்தில் புதிய சட்டமன்றம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என சட்டமன்ற நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிய சட்டமன்றம் அமைக்கப்பட்டால், அப்பகுதியில் புதிய நகரம் உருவாகும், நிர்வாகப் பணிகளை விரைந்து செயல்படுத்த வசதியாக இருக்கும்" இவ்வாறு சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்வது எளிதாகும். சென்னையில் இருந்து ஓசூருக்கு ரயிலில் செல்ல வசதிகள் கிடையாது, அதேபோல் சென்னையில் இருந்து தர்மபுரிக்கும் ரயில் வசதி நேரடியாக கிடையாது. சேலம் சென்று தான் போக முடியும். மொரப்பூர் தர்மபுரி பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டால், பெங்களூருக்கு சென்னையில் இருந்து புதிதாக ரயில்கள் விடுவதுஅதிகரிக்கும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+