பேருந்திலிருந்து தெறித்து ஓடிய ஒத்தரோசா! கட்டை பைக்குள் இருந்து குவா குவா! திடுக்கிட்ட திண்டுக்கல்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் விட்டுச் சென்ற கட்டை பைக்குள் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் பெண் சிசு கொலை என்பது இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றியும் அல்லது சிசுவிலேயே பெண் என தெரிந்தால் கருக்கலைப்பு செய்து கொன்றுவிடும் சம்பவம் இன்றளவும் இருக்கிறது என்கின்றனர் சமுக ஆர்வலர்கள்
அண்மையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இதற்கு சான்றாக இருக்கின்றன. தமிழகம் முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டாலும் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு நடந்து வருகிறது.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
அந்த வகையில் செம்பட்டியில் பேருந்தில் ஒரு மாதம் ஆன, பெண் குழந்தையை விட்டுச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர். அந்த குழந்தை தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே, காமாட்சிபுரத்தைச் சேர்ந்த வேலுமணி என்ற பெண் வியாழக்கிழமை மாலை வத்தலக்குண்டில் இருந்து செம்பட்டிக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார்.

பெண் மாயம்
இவரது அருகில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் அமர்ந்திருந்தார். அவர், கையில் ஒரு கட்டை பையுடன் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செம்பட்டி பஸ் நிலையம் வந்தவுடன், அந்த 20 வயது மதிக்கதக்க பெண், பஸ்சிலிருந்து வேகமாக இறங்கி சென்று விட்டார். அந்த சீட்டில் வேலுமணி அருகே, கட்டை பைக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது, கட்டை பையை எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் ஒரு மாதம் ஆன பெண் குழந்தை இருந்துள்ளது.

பெண் குழந்தை
இதனை வேலுமணி என்ற பெண், செம்பட்டி காவல் நிலையம் சென்று சப்-இன்ஸ்பெக்டர் நாராயணனிடம் ஒப்படைத்தார். அவர், இதுகுறித்து ஆத்தூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்குவந்த சமூகநல துறையினர், ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை பெற்று கொண்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், தமிழக அரசு தொட்டில் திட்டத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை
ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை கட்டை பையில் வைத்து, பஸ்ஸில் விட்டு சென்ற கல் நெஞ்சம் படைத்த தாயை, செம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பெண் குழந்தை என்பதால் பெருந்தில் விட்டுச் சென்றார்களா அல்லது எங்கிருந்தாவது குழந்தை கடத்தி வரப்பட்டதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications