தப்பு பண்றீங்க! கனவில் வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா! பொதுக்குழு பற்றி பகீர் கிளப்பிய வேடச்சந்தூர் "தலை"
திண்டுக்கல்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ள நிலையில் நாளை பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தனது கனவில் எம்ஜிஆர், ஜெயலலிதா வந்ததாகவும், அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து பேசியதாகவும் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த நபர் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே பொதுக்குழுவுக்கு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நாளை பொதுக்குழு கூட்டம்
அதிமுகவின் பொதுக்குழுவுக்கு நாளை நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும் நாளை காலை தான் வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் நாளை பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் பொதுக்குழு நடந்தால் என்ன செய்வது? பொதுக்குழு நடக்காவிட்டால் என்ன செய்வது? என்பது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டடு வருகிறது.

வேடச்சந்தூர் நபர் பேட்டி
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கருமலை சமாஸ்தான கோரக்க நகரில் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா சமாதியின் நிர்வாகத்தை நிர்வகித்து வரும் சரவணகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தனது கனவில் வந்து அதிமுக விவகாரங்கள் பற்றி பேசியதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி சரவணகுமார் கூறியதாவது:

கனவில் வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா
எனது கனவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வந்தனர். 10 நாளுக்கு முன்பு அதிமுகவின் நிறுவன தலைவர் எம்ஜிஆர் என்னிடம் அதிமுக கட்சி பற்றி கூறினார். இதுதொடர்பாக மீடியாவிடம் எப்படி சொல்ல வேண்டும் என எனக்கு தெரியவில்லை. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பிரஷர் ஓவர் ஆனதால் இன்று தகவலை கூற வேண்டி உள்ளது. அதிமுக என்பது தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை தொண்டனின் ரத்த நாளத்தினால் கோர்க்கப்பட்ட மிகப்பெரிய அமைப்பு. இந்த அமைப்புக்காக இவ்வளவு பேர் சண்டையிடுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் முடிந்தவரை சமாதானமாக செல்ல வேண்டும் என கூறினார். நான் கடுமையான கோபத்தில் இருப்பதாக பதிவு செய்ய வேண்டும் என எம்ஜிஆர் கேட்டு கொண்டார்.

ஜெயலலிதா கூறியது என்ன?
இந்த வேளையில் ஜெயலலிதா பேசினார். அப்போது நான் இறப்பதற்கு முன்பாக ஆட்சி பொறுப்பையும், கட்சி பொறுப்பையும் ஓபிஎஸ் வசம் தான் ஒப்படைத்தேன். அவர் தான் பார்த்து கொள்ள வேண்டும் என கூறிவிட்டு சென்றேன். ஆனால் ஒற்றை தலைமையோ, இரட்டை தலைமையோ அல்லது பதவியை விட்டு கொடுப்பது பற்றி நான் எதுவும் அவரிடம் கூறவில்லை. நான் எல்லாவற்றையும் அவரிடம் தான் ஒப்படைத்து சென்றேன். திருப்பி அவர் அனைத்தையும் ஒப்படைக்கட்டும்.

பொதுச்செயலாளர் யார்?
பொதுச்செயலாளர் பதவி என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டியது. இதுபற்றி நாங்கள் முடிவு செய்வோம். அதுவரை இதுதொடர்பாக எந்த பஞ்சாயத்தும் கூடாது என சொல்ல கேட்டு கொண்டதால் அதனை கூறுகிறேன். ஓபிஎஸ், இபிஎஸ் மீது எம்ஜிஆர், ஜெயலலிதாகவுக்கு கோபம் உள்ளது. கடுமையான கோபம் உள்ளது. இதனால் பிரச்சனையை சுமூகமாக முடியாவிட்டால் இருவரில் ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடுத்து விடுவோம் என கூறினர்.

3 பேரின் பெயர் பட்டியல்
மேலும் பொதுச்செயலாளராக இவர்களை நியமிக்கலாம் என ஜெயலலிதா ஒரு பேப்பரில் பெயர்களை எழுதி எம்ஜிஆரிடம் கொடுத்தார். அதில் 3 பெயர்கள் இருந்தன. ஒருத்தர் கலைத்துறை(பெயர் கூறவில்லை), இன்னொரு பெயர் சசி, மற்றொரு பெயர் விவேக் என எழுதி இருந்தது. இவர்களை பரிசீலனை செய்யலாம் என ஜெயலலிதா கேட்டார்.

நேரில் பார்க்கவில்லை
நான் இதுவரை நேரில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, விவேக் என யாரையும் பார்த்தது இல்லை. கட்சி பொறுப்புகளை ஓபிஎஸ்ஸிடம் கொடுத்ததாகவும், இதுபற்றி பேசி தீர்த்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். இதை மீறி கடும் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர். இவை அனைத்தையும் என் கனவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வந்தனர். சுமார் ஒருமணிநேரம் என்னிடம் கூறினர்.

உச்சக்கட்ட பிரச்சனை
நாங்கள் இறந்ததாக நினைக்கவேண்டாம். நடப்பது அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். யார் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அதனை செய்து வருகிறோம். ஒரு சிலருக்கு தெரிந்தும் பொருளாதாரம், உடல்நலம் சார்ந்த நெருக்கடியை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு மட்டுமின்றி அவர்கள் என்னிடம் இதற்கு முன்பும் பேசியுள்ளனர். அதுபற்றி நான் எதுவும் கூற முடியாது. தற்போதைய பிரச்சனை உச்சக்கட்டத்துக்கு சென்றதால் அவர்களின் வலியுறுத்தலின்பேரில் உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதுதொடர்பாக நீதியரசர் தீர்ப்பு அளித்தாலும் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வை நாங்கள் செய்வோம் என்றனர். மேலும் இன்னொரு பெண் ஜெயலலிதாவுடன் இருந்தார். கட்சியை நான் தான் வழிநடத்த போகிறேன் என்றார். அந்த பெண் யார் என எனக்கு தெரியவில்லை'' என கூறியுள்ளார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications