திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மேலும் ஒரு அரசு கல்லூரி.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு கலைக் கல்லூரியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்தார். தொகுதியில் அரசு கல்லூரி, பரப்பலாறு அணை தூர்வாருவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகின.

 Chief Minister Stalin inaugurated the newly established Government College at Ottanchattaram.

சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அத்துறையின் அமைச்சர் பிகே சேகர்பாபு கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். ஏற்கெனவே தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 150 கோடி ரூபாய் செலவில் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: வானளாவிய அதிகாரம் பெற்ற ஓபிஎஸ்-இபிஎஸ்: தீர்மானம் 3 சொல்வது என்ன? அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: வானளாவிய அதிகாரம் பெற்ற ஓபிஎஸ்-இபிஎஸ்: தீர்மானம் 3 சொல்வது என்ன?

அதில், முதல்கட்டமாக 4 கல்லூரிகளுக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை, கொளத்தூரில் 'கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி', நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 'அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி', திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 'பழனியாண்டவர் மகளிர் கல்லூரி' மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 'சுப்ரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி' ஆகிய 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

 Chief Minister Stalin inaugurated the newly established Government College at Ottanchattaram.

மேலும், தனியார் கட்டிடத்தில் அனுமதி பெற்று வாடகையில் இந்த கல்லூரிகளில் நடத்த உள்ளதாகவும், இந்த கல்லூரிகளில் பி.காம், பிசிஏ. , பி பி ஏ., பிஎஸ்சி., கணினி அறிவியல் ஆகிய நான்கு இடம்பெறவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் , ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், உயர்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: வானளாவிய அதிகாரம் பெற்ற ஓபிஎஸ்-இபிஎஸ்: தீர்மானம் 3 சொல்வது என்ன?அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: வானளாவிய அதிகாரம் பெற்ற ஓபிஎஸ்-இபிஎஸ்: தீர்மானம் 3 சொல்வது என்ன?

இந்த கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், இங்கு கல்லூரி அமைந்துள்ளதன் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிகம் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Chief Minister Stalin today inaugurated the newly established Government Arts College on behalf of the Department of Hindu Religious and Charitable Endowments Department in Ottansathram, Dindigul District through a video presentation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X