உயிர் பிழைத்துவிடவே கூடாது.. திண்டுக்கல்லில் ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்.. பகீர் சிசிடிவி காட்சி
திண்டுக்கல் : எந்த சூழலிலும் உயிர் பிழைத்துவிடவே கூடாது என்கிற அளவிற்கு திண்டுக்கல்லில் பட்டப்பகலில் செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளரை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Recommended Video
திண்டுக்கல் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான் பாபு( வயது 35) இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே நேற்று மதியம் கடையில் இருந்து வேலை விஷயமாக சட்டாம்பிள்ளை தெரு பகுதியில் நடந்து வந்தார்.
அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மறித்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது. தப்பிக்க முயன்ற அவர் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் விடாமல் விரட்டி விரட்டி வெட்டியது. கடுமையாக போராடிய மீரான் பாபு ஒரு கட்டத்தில் அவர்களை கொடூர தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

கொடூரம்
ரத்த வெள்ளத்தில் சரிந்த மீரான் பாபு எந்த சூழலிலும் உயிர் பிழைத்துவிடக்கூடாது என்று கருதிய கும்பல் அவரை கத்தியால் கடுமையாக குத்தியும், வெட்டியும் தாக்கியது. 3பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தை அரங்கியேற்றிய நிலையில், சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வருகிறார்.

ஆத்திரம்
அவரது வாகனத்தில் இருவர் ஏறிக்கொள்கிறார்கள். இறுதியில் இன்னொருவர் ஆத்திரம் தீராத அளவிற்கு மீரான் பாபுவை கொடூரமாக தாக்கிவிட்டு வாகனத்தில் தப்பிக்கிறார். இப்படியாக சிசிடிவி வீடியோ காட்சிகள் முடிகிறது

சிகிச்சை
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மீரான் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் இளைஞரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை உதவியுடன் தேடி வருகின்றன.

அதிகரிக்கும் கொலைகள்
கொலை முயற்சி சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கொலை முயற்சி சம்பவம் நடந்தது திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் கொலை சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகரித்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications