கணவன் கொலை! மர்டர் கேசில் மகனை மாட்டிவிட்ட ‘பாண்டீஸ்வரி’! கெத்தாய் சுற்றியவரை அள்ளிய போலீஸ்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணவனை உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்ததோடு அந்த வழக்கில் தப்பிப்பதற்காக பெற்ற மகனின் படிப்பை கெடுத்து காவல் நிலையத்தில் சரணடைய வைத்த தாயை ஐந்து மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓமந்தூரார். இவருக்கு பாண்டீஸ்வர் என்பவருடன் திருமணமாகி 1 மகன், ஒரு மகள் உள்ளனர். கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
ஓமந்தூரானுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

பைனான்சியர்
இதனால் அவரது மகன் வேதனையடைந்தார். இது குறித்து அடிக்கடி தனது தந்தையிடம் தட்டிக் கேட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவும் குடிபோதையில் வந்த ஓமந்தூரார் தனது மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் மனைவி பெயரில் இருக்கும் வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டுள்ளார்.

அடித்துக் கொலை
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அவரது மகன் அருகில் இருந்த கிரிக்கெட்மட்டையால் தந்தையின் தலையில் தாக்கியதாகவும், இதில் ரத்த வெள்ளத்தில் ஓமந்தூரான் சம்பவ இடத்திலேயே பலியானார். எனக் கூறி அவரது 15 வயது மகன் கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி போலீசில் அவரது மகன் சரணடைந்தார். இதனையடுத்து அவர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

மனைவி கைது
இந்நிலையில் ஓமந்தூரார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ஓமந்தூரரின் தந்தை ரங்கசாமி புகாரின் பேரில் மறு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதனை அடுத்து தீவிர விசாரணை செய்யப்பட்டதில் ஓமந்தூரார் மனைவி பாண்டீஸ்வரி, அவரது உறவினர் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகிய நான்கு பேர் விசாரணை செய்ததில் ஐந்து பேரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

தாயின் திட்டம்
தன் மகனுக்கு 15 வயதே இருப்பதால் விரைவில் அவர் விடுதலை ஆகி விடுவார் என்பதற்காக மகனின் படிப்பை கெடுத்து அவரை போலீசில் சரணடைய வைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஏற்கனவே ஓமந்தூராரின் 15 வயது மகன் கிரிவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் அவரது மனைவி உறவினர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகனின் படிப்பை கெடுத்து தாயே போலீசில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications