பழனி அருகே கணவனை அடித்து கொன்ற மனைவி.. மைத்துனர் உள்பட 3 பேர் கைது
திண்டுக்கல்: பழனி அருகே பெருமாள்புதூரில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி மற்றும் மைத்துனர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது மூவரும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே விவசாயி இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ள பெருமாள்புதூரில் வசித்து வந்த கருப்புசாமி(45) என்ற விவசாயி நேற்று இரவு பெருமாள்புதூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதனைக்கண்ட அப்பகுதியினர் உடனடியாக பழனி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி தாலுகா காவல் துறையினர் கருப்புசாமி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளத்தொடர்பு
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கருப்புசாமி குடித்துவிட்டு அவ்வப்போது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தது தெரியவந்தது. மேலும் கருப்புச்சாமி வேறு சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

சமரச பேச்சுவார்த்தை
இந்நிலையில் மனைவி மீனாட்சி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கருப்புசாமியுடன் சண்டையிட்டு அதே ஊரில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று மீனாட்சி அவரது அண்ணன் ராஜேந்திரன் மற்றும் உறவினர் சத்திசிவம் ஆகிய மூவரும் கருப்புசாமியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்து கொலை
இதில் மீனாட்சி, ராஜேந்திரன், சக்திசிவம் ஆகியோர் தாக்கியதில் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீனாட்சி, ராஜேந்திரன், சக்திசிவம் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.ஏ.பி வாய்க்கால்
பல்லடம் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் வீசப்பட்ட ஆண் சடலம் மீட்கப்பட்டது.
கொலையாளிகள் குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் வெங்கமேடு பி.ஏ.பி வாய்க்காலி
ல் தற்போது சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாய்க்கால் நீரில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வருவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பலத்த வெட்டுக்காயம்
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்து சென்ற காவல் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தண்ணீரில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்டனர். வாலிபரின் உடலில்,தலை,முதுகு கைகளில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து உடலை கைப்பற்றி திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அவினாசிபாளையம் போலீசார் பலத்த வெட்டுக்காயங்களுடன் பி.ஏ.பி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட அந்த வாலிபர் யார்,வாலிபரை கொலை செய்து வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும்,கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ம்
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications