தினமும் வந்து கையெழுத்து போட முடியல.. தளர்வு கோரிய அங்கித் திவாரி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி!
திண்டுக்கல்: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.

பின்னர் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததையடுத்து அங்கித் திவாரி தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜாமின் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. எனினும், உச்சநீதிமன்றம் அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த மார்ச் 20ஆம் தேதி உத்தரவிட்டது.
அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.. 110 நாட்களுக்குப் பிறகு விடுவிப்பு!
மேலும், மாநில அரசு அனுமதி இன்றி வெளியூர் செல்லக் கூடாது, நீதிமன்ற வேலை நாட்களில் தினமும் கையெழுத்திட வேண்டும், விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கு சாட்சியங்களை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற வேலை நாட்களில் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து தளர்வு கோரி அங்கித் திவாரி கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.
அங்கித் திவாரிக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் மனுவை தள்ளுபடி செய்தது திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனா உத்தரவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications