Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன் தொல்லை- திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் குடும்பத்தினர் 7 பேர் தீக்குளிக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தந்ததாகக் கூறி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கடன் தொல்லை- திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் குடும்பத்தினர் 7 பேர் தீக்குளிக்க முயற்சி

    வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த 7 பேரும் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதை கண்ட போலீசார் உடனடியாக வந்து தண்ணீரை ஊற்றி அவர்களைக் காப்பாற்றினர்.

    பால் வியாபாரி ஒருவர் வாங்கிய 13 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தரவில்லை எனவும் தன்னை நம்பி கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

    ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் குடும்பம் தீக்குளிக்க முயற்சி... திண்டுக்கல்லில் பரபரப்பு

    அரசு ஊழியர் குடும்பம்

    அரசு ஊழியர் குடும்பம்

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதிக்குட்பட்ட காந்தி நகரை சேர்ந்த அரசு ஊழியர் எபிநேசர். இவரது மனைவி அன்னால். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் அன்னாலின் அண்ணன் குடும்பம் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலத்திற்கு தன்னுடைய 3 குழந்தைகள், அண்ணன் மனைவி மற்றும் அவரது 2 குழந்தைகள் ஆகியோருடன் வந்தார் அன்னால்.

    உடலில் தீ வைக்க முயற்சி

    உடலில் தீ வைக்க முயற்சி

    பொதுமக்களோடு மக்களாக சென்று கொண்டிருந்த அவர் திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை குழந்தைகள் மீது ஊற்றினார். பின்னர் தனது அண்ணி மீதும் தன் மீதும் வேகமாக மண்ணெண்ணெய் ஊற்றினார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீ வைப்பதற்காக அன்னால் தீப்பெட்டியை எடுத்தபோது அங்கிருந்த பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இது மட்டுமின்றி அங்கு குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து அன்னால், அவரது அண்ணி மற்றும் குழந்தைகள் மீது ஊற்றினர். இதையடுத்து தாங்கள் இறந்துபோவதை தடுக்க வேண்டாம் என அன்னால் உள்பட 7 பேரும் கதறி அழுதனர். ஒருவழியாக அவர்களை தடுத்த போலிசார் நடந்த விவரம் குறித்து கேட்டறிந்தனர்.

    தீக்குளிக்க முயன்றது ஏன்?

    தீக்குளிக்க முயன்றது ஏன்?

    தற்கொலைக்கு முயன்ற காரணத்தை தெரிவித்த அன்னால் பின்வருமாறு தெரிவித்தார். என் பெயர் அன்னால். எனது கணவர் எபிநேசர் அரசு ஊழியராக உள்ளார். நான் வத்தலகுண்டு பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறேன். எனது கடை அருகே பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஜான் மைக்கேல் கென்னடி என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். பக்கத்துக் கடைக்காரர் என்பதால் நட்பின் அடிப்படையில் அவருடன் பழகி வந்தேன். என்னுடன் நட்பாக பழகி வந்த ஜான்மைக்கேல் கென்னடி, அடிக்கடி என்னிடம் கடனாக பணம் வாங்கி வந்துள்ளார். திருப்பித் தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் எனக்கு தெரிந்தவர்களிடமும் பணம் வாங்கி ஜான் மைக்கேலுக்கு கொடுத்து வந்தேன்.

    ரூ. 13 லட்சம் கடன் மோசடி

    ரூ. 13 லட்சம் கடன் மோசடி

    இதுவரை அவருக்கு 13 லட்சம் ரூபாய் வாங்கித் தந்துள்ளேன். தற்போது கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்குவதால் பணத்தை திருப்பித் தருமாறு ஜான் மைக்கேலிடம் கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பித் தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். மேலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அவருக்கு தெரிந்த போலீசார் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார். தற்போது கடன் கொடுத்தவர்கள் வீடு தேடிவந்து தனக்கு நெருக்கடி கொடுப்பதால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த சம்பவத்தை கேள்விபட்ட என்னுடைய கணவரும் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார். அன்னாலின் குறைகளை கேட்ட போலீசார் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதாக உறுதி அளித்ததாக தெரிகிறது.
    இதுபோல் கடந்த வாரங்களில் தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+