Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனி டூ கொடைக்கானலுக்கு இனி பறக்கலாம்! சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! அரசின் திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : பழனி மலைக் கோவிலில் இயக்கப்படுவது போல், கொடைக்கானல் பழனி இடையே ரோப் கார் திட்டம் குறித்து வெளிநாட்டு பொறியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ள நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் உலக அளவில் கொடைக்கானல் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற இரு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. ஒன்று பழனி முருகன் கோவில் மற்றொன்று கொடைக்கானல். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக கருதப்படும் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

அவர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல வசதியாக ரோப் கார் இயக்கப்படுகிறது. மின் இழுவை ரயிலில் பயணிப்பதை விட ரோப் காரில் பயணிப்பதையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே ரோப் கார் இயக்குவதற்கான முன்னேற்பாடுகள் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கொடைக்கானல் ரோப் கார்

கொடைக்கானல் ரோப் கார்

இடையே பழனி மலையில் இருந்து கொடைக்கானல் மலைக்கு ரோப் கார் இயக்குவதற்கான திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் நடைமுறை சிக்கல்கள் காரணமாக அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. கொடைக்கானல் கிட்டத்தட்ட 3000 மீட்டர் உயரத்தில் இருக்கும் நிலையில் பழனி மலையோ வெறும் 500 மீட்டர் உயரத்திற்குள் தான் இருக்கிறது. கொடைக்கானலில் இருந்து பழனி வரை இடையே ஏராளமான ஓடைகள், வனப்பகுதி மலைமுகடுகள் இருப்பதால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்தது?

18 இடங்களில் ஏற்பாடு

18 இடங்களில் ஏற்பாடு

இந்த நிலையில் இந்தியா முழுவதும் 18 இடங்களில் ரோப் கார் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி இடையே ரோப்கார் திட்டமும் ஒன்றாகும். இந்த நிலையில் முதற்கட்டமாக ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் குழு கொடைக்கானலில் நிலவும் கால நிலை,இயற்கை இடர் பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்தும், சுற்றுலா அலுவலகத்தில் ஆலோசனை செய்தன‌ர்.

பொறியாளர்கள் ஆய்வு

பொறியாளர்கள் ஆய்வு

இதனையடுத்து கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட‌ கோவில்பட்டி மற்றும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட ப‌ல்வேறு இடங்க‌ளிலும் ம‌லைத்தொட‌ர்க‌ளிலும்,ம‌லைப்ப‌குதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இது குறித்து வெளிநாட்டு பொறியாளர் குழுவின‌ர் தெரிவிக்கும் போது சுமார் 450 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும்,மேலும் கொடைக்கானலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் ரோப்கார் அமைக்க இருப்பதாகவும், மேலும் இந்த பணிகளானது 6 மாதம் வரை நடைபெறும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

மேலும் விரைவில் ஆய்வுகள் நிறைவுபெற்று பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்த ரோப் கார் திட்டம் முத‌ற்க‌ட்ட‌ ஆய்வுப்ப‌ணிக‌ள் ந‌டைபெறுவ‌து சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே கூறியது போல பல நடைமுறை சிக்கல்களும் எழுந்துள்ளது. பழனி ரோப்காரில் கடந்த 2007 ஆம் ஆண்டு வரை லாக்கிங் சிஸ்டம் அதாவது கம்பி சுழன்று கொண்டிருக்கும்போது ரோப் கார் பெட்டிகள் மட்டும் தனித்தனியே கம்பிகளில் சென்று லாக் ஆவது போல அமைக்கப்பட்டிருந்தது.

சூழல் பாதிப்பு

சூழல் பாதிப்பு

அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டு ஒரே நேரத்தில் நான்கு பெட்டிகள் மேலும் கீழுமாக செல்லும் வகையில் பிட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த உயரம் கொண்ட பழனி மலை ரோப் காரில் விபத்து ஏற்பட்ட நிலையில் 3500 மீட்டர் உயரம் கொண்ட கொடைக்கானலில் இருந்து பழனிக்கு ரோப் காரை இயக்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் வன ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுற்றுலா வளர்ச்சி

சுற்றுலா வளர்ச்சி

தற்போது கொடைக்கானல் உச்சி வரை இல்லாமல் கொடைக்கானல் மலைத் தொடர்ச்சியின் மேற்கு பகுதியில் இருந்து பழனி மலைக் கோவில் வரை சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும் என முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போதைய தகவல்களின்படி 12 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரோப் கார் திட்டம் இந்தியாவின் மிக நீண்ட தூர ரோப் கார் திட்டமாகவும் இருக்கும் என்கின்றனர். பல்வேறு சிக்கல்களை கடந்து இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக பழனியும் கொடைக்கானலும் மாறும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+