பழனி முருகன் சிலைக்கு வியர்க்குமா? கெளபீனத் தீர்த்தம் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்! ஆச்சர்யம்!
திண்டுக்கல் : உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலவரான நவபாஷாண மூர்த்தி சிலைக்கு வியர்க்கும் என்பதும் அதிலிருந்து சேகரிக்கப்படும் கெளபீனத் தீர்த்தம் பல நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டது என்பது பலருக்கும் தெரியாதது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புறவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

பழனி முருகன் கோவில்
பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.

நவபாஷாண சிலை
இந்த கோவிலைப் பற்றி பலருக்கும் தெரியாத பல உண்மைகள் இருக்கின்றன. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் வீற்றிருக்கும் செந்திலாண்டவரின் சிலை ஒன்பது விதமான மூலிகைகளை பக்குவம் செய்து போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அதற்கு நவபாஷாண சிலை என்று பேர் ஏற்பட்டது. நவ என்றால் ஒன்பது என்று பெயர். 18 சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் போகர், தனது சீடரும் மற்றொரு சித்தருமான புலிப்பாணியுடன் இணைந்து கன்னிவாடியில் அமைந்திருக்கும் மெய் கண்ட சித்தர் குகையில்தான் இந்த நவபாஷாண சிலையைச் செய்தார் என்பது வரலாறு.

போகர்
18 சித்தர்களில் போகர் என்ற சித்தரும் ஒருவர். இந்த போகர் சித்தர்தான், தனது சீடரும் 18 சித்தர்களில் மற்றொருவருமான புலிப்பாணி சித்தருடன் இணைந்து கன்னிவாடியில் இருக்கும் மெய்கண்ட சித்தர் குகையில் தங்கி இந்த நவபாஷாண சிலையை உண்டாக்கியதாக குறிப்புகள் சொல்கின்றது. 18 சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் போகர், தனது சீடரும் மற்றொரு சித்தருமான புலிப்பாணியுடன் இணைந்து கன்னிவாடியில் அமைந்திருக்கும் மெய் கண்ட சித்தர் குகையில்தான் இந்த நவபாஷண சிலையைச் செய்தார் என்பது வரலாறு.

நவபாஷாண மூர்த்தி
நவபாஷாணம் என்பது, கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷாணம், ரத்த பாஷாணம், கம்பி நவரசம், குதிரைப் பல், லிங்கம், கெளரி பாஷணம், சீதை பாஷணம் என்கிற ஒன்பது வகையான மிக அபூர்வமான மூலிகைகளையும், விஷங்களையும் கொண்டு மிகக்கடினமான செய்முறைகளால் உருவாக்கப்படுவது. இம்மூலிகைகளை இனம்கண்டறியும் திறன் பழங்கால சித்தமருத்துவர்களுக்குக் கூட கிடையாது என்பதுதான் உண்மை. இத்தகைய பெருமைமிக்க நவபாஷாண மூர்த்தியை செய்து முடித்த போகர், அதை பிரதிஷ்டை செய்ய செவ்வாயின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியைத் தேடினார். அப்போது, அதற்கு பொருத்தமான இடமாக கிடைத்ததுதான் இந்த பழனி மலை.

சிலைக்கு வியர்க்குமா?
நவபாஷாண சிலையின் சிறப்பம்சமே மனிதனுக்கு ஏற்படுவது போல இரவில் இச்சிலைக்கு வியர்வை வெளியேறும். 'விஷத்திற்கு விஷமே மருந்து' என்பது போல நவபாஷாண திருமேனியில் இருந்து வெளியேறும் அவ்வியர்வை பல்வேறு நோய்களைக் குணமாக்கக் கூடியது. அதனால், இரவில் நடைபெறும் ராக்கால பூஜையின்போது சிலையின் மேனி முழுவதும் சந்தனம் பூசப்படுவதுடன், சிலைக்கு அடியில் வியர்வையை பிரசாதமாக சேகரிக்க ஒரு பாத்திரமும் வைக்கப்படும்.

கெளபீனத் தீர்த்தம்
மறுநாள் அதிகாலையில் சிலையின் மேனியில் உள்ள சந்தனம் வழித்தெடுக்கப்படும் போது அச்சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறமாக ஒட்டிக் கொண்டிருக்குமாம். மேலும், கீழே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலும் நீர் நிரம்பியிருக்குமாம். இது 'கெளபீனத் தீர்த்தம்' என்று அழைக்கப்படும். இந்த நீரும், சந்தனமும் உலகெங்கிலும் காணக் கிடைக்காத அதிசயமான அருமருந்து. இச்சந்தனமும், நீரும் காலை 4 மணி முதலே கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இந்த தீர்த்தம் தீராத நோய்களையெல்லாம் தீர்க்கும் என்பதும் நம்பிக்கையாக இன்றளவும் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications