"மைசூர்பாக்" பெயர் திடீர் மாற்றம்.. இனி ‛மைசூர் ஸ்ரீ'னு தான் சொல்லணுமாம்.. என்ன காரணம்னு பாருங்க?
ஜெய்ப்பூர்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தான் இடையேயான மோதல் நின்றாலும் கூட இன்னும் பதற்றம் தணியவில்லை. இந்நிலையில் தான் உலகப்புகழ் பெற்ற ஸ்வீட்டாக இருக்கும் ‛மைசூர்பாக்' பெயர் ‛மைசூர் ஸ்ரீ' என்று மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த தாக்குதலுக்கு நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

கடந்த 7 ம் தேதி ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணைகளை அனுப்பி பாகிஸ்தானை பதம் பார்த்தது நம் நாடு. இதில் பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் பதிலடி தாக்குதலைநம் நாடு முறியடித்ததோடு, அதன்பிறகு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
இதையடுத்து இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் நம்மிடம் சண்டையை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. தற்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது.
இருப்பினும் கூட நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் இன்னும் தணியவேயில்லை. இதற்கிடையே தான் தற்போது உலக புகழ்பெற்ற இனிப்புகளில் ஒன்றாக ‛மைசூர் பாக்' பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‛மைசூர் பாக்' பெயர் என்பது ‛மைசூர் ஸ்ரீ' என மாற்ற்பட்டுள்ளது. அதாவது ‛மைசூர் பாக்' என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று வருகிறது. இது பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளதாக கருதி ‛மைசூர் பாக்' பெயரை ‛மைசூர் ஸ்ரீ' என்று மாற்றி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்வீட் கடை விற்பனை செய்து வருகிறது.
அதேபோல் அந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் உள்ளிட்டவற்றின் பெயர்களும் கோந்த் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ என்று பெயர்களை மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த ஸ்வீட் கடையில் பெயர் மாற்றி ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு இருக்கும் போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications