இரண்டாக பிளந்த நிலம்.. கொடைக்கானல் நிலப் பிளவால் பீதியில் மக்கள்! என்னாச்சு? அதிகாரிகள் இன்று ஆய்வு
திண்டுக்கல் : கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட புவி வெடிப்பு தொடர்பாக இன்று உடுமலைப்பேட்டை ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இன்று மாலை அதன் முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள முண்டகாயம், சூரல்மாலா ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் படுகாயங்களுடன் 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. இந்த நிலையில் வயநாடு நிலச் சரிவை தொடர்ந்து நீலகிரி, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலநடுக்க அபாயமும் நிலச்சரிவு அபாயமும் இருப்பதாக தகவல் பரவியது.
இதனை இந்திய புவியியல் கண்காணிப்பகமும், வானிலை ஆய்வு மையமும் மறுத்தது. அதே நேரத்தில் கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள மலைப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் மழை பெய்யும் போதெல்லாம் ஒருவித அச்சத்தோடு இருந்தனர். இந்த நிலையில் இருக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிளாவரை கிராமம் அமைந்துள்ளது இந்த கிளாவரை கிராமத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் இருக்கக்கூடிய ஆனைமலை புலிகள் காப்பகம் வன பகுதிற்கு உட்பட்ட செருப்பநோடை எனும் பகுதி உள்ளது. இங்கிருந்து கிளாவரை கிராமத்திற்கு குழாய்கள் மூலமாகவும், வாய்க்கால் மூலமாகவும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் இருந்து தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
அதனை தொடர்ந்து இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கிராம மக்கள் சிலர் அந்த செருப்பநோடை பகுதிக்கு சென்று பார்த்த பொழுது அங்கு நிலத்தில் சுமார் 300 அடி நீளத்துக்கு மேலாக நிலத்தில் பிளவு ஏற்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து நிலத்தில் பிளவு ஏற்பட்டு காட்சிகளை சமூகவலைத்தளங்களை பதிவிட்டு இருந்தனர்.
அதனை தொடர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது வரை எந்த ஒரு நில அதிர்வு ஏற்பட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும், தென்படவில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தனர். இருந்த போதிலும் இந்த வனப் பகுதிக்குள் உள்ள
நிலத்தில் இந்த பிளவு ஏற்பட்டதுக்கான காரணம் என்னவென்று தற்போது வரை தெரியவில்லை.

தொடர்ந்து இதனால் வேறு பாதிப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற பல்வேறு குழப்பத்திலும் இருந்த இப்பகுதி மக்கள் இருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அதன் முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து இன்று உடுமலைப்பேட்டை ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறையை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இது குறித்தான தகவல் இன்று மாலைக்குள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications