அதிகாலையில் அதிரடி.. பழனி நில மோசடியில் தொடர்புடைய 4 பேர் கைது! ஆக்ஷனில் இறங்கிய சிபிசிஐடி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ரூ.100 கோடி மதிப்பு கொண்ட கோயில் நிலத்தை முறைகேடாக ரூ.2 கோடிக்கு தனி நபர்களுக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்ட விவகாரத்தில், 4 பேரை இன்று அதிகாலை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

இவர்கள் மீது ஏற்கெனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Palani Land Scam

கோயில் நிலத்தை சுருட்டிய கும்பல்

கடந்த 1888ம் ஆண்டு பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில் மடத்திற்கு, 1.4 ஏக்கர் நிலத்தை பக்தர் கொடுத்திருக்கிறார். இந்த நிலத்தை விற்கவோ, திருப்பணிகளை தவிர மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தவோ கூடாது என்று பத்திரத்தில் தெளிவாக எழுதி தந்திருக்கிறார். இருந்தும் கூட நிலத்தை விற்க பலமுறை முயற்சிகள் நடந்திருக்கின்றன.

பின்னர் நீதிமன்றம் தலையிட்டு, இனி யாரும் இந்த நிலத்தை விற்க கூடாது. இது கோயில் நிலம். வணிக பயன்பாட்டுக்கு இதை பயன்படுத்த முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டது.

பத்திரப்பதிவு செய்து மோசடி

இப்படி இருக்கையில்தான் ஜூலை.6ம் தேதி அந்த சம்பவம் நடந்தது. திண்டுக்கல் பதிவாளர் அன்று விடுப்பில் சென்றிருந்தார். அவருக்கு பதில், ஒரு நாள் மட்டும் பதிவாளராக கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வந்திருந்தார். சரி ஒருநாள் தானே! வந்தோமா.. வேலையை சரியாக செய்தோமா.. என்று இல்லாமல்.. மேற்குறிப்பிட்ட 1.4 ஏக்கர் கோயில் நிலத்தை வெள்ளதுரை, சேதுபதி என 2 பேருக்கு கிரயம் செய்திருக்கிறார். நாங்கள்தான் மடதுக்காரர்கள் என்று சொல்லி முருகதாஸ் சுவாமிகள் என்பவர் கோயில் நிலத்தை விற்றிருக்கிறார்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்த விஷம் வெளியில் தெரிந்தவுடன், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில் நிலம் சரிபார்க்காமல் விற்கப்பட்டிருக்கிறது என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருக்கிறது. பின்னர் பிரச்சனை சீரியஸாகியிருக்கிறது. விற்பனைக்கு வந்தது கோயில் நிலமா? வணிக பயன்பாட்டுக்கான நிலமா என்று கூட பார்க்காமல் பத்திர பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனில்.. பதிவாளர் என்ன செய்துக்கொண்டிருந்தார்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி.. இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அதிரடி கைது

தவெக கூட்டணி கட்சிகளே இதில் அழுத்தம் கொடுத்ததையடுத்து, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது தமிழக அரசு. பின்னர் இதில் சம்பந்தப்பட்டவர்களின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சிபிசிஐடி ரெய்டு நடத்தியிருந்தது. இதை தொடர்ந்து தற்போது வெள்ளதுரை, அன்வர்தீன், முருகதாஸ் மற்றும் சேதுபதி என 4 பேர் அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

முன்னதாக உஷாரான பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் பெற்றார். மட்டுமல்லாது அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+