வேட்டையனால் மிரண்ட கங்குவா? தள்ளிப்போன ரிலீஸ் தேதி..அண்ணன விட்ருங்க ஞானவேல் ராஜா.. ரசிகர்கள் காட்டம்
திண்டுக்கல்: ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் கங்குவா படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தின் ரிலீஸ் காரணமாக கங்குவா ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஞானவேல் ராஜாவை கண்டித்து திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா முதன்முதலாக நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா என்ற திரைப்படத்தை இயக்குகிறார் என்ற செய்தி வெளியான போதே பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தன.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திசா பதானி, பாபி தியோள், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருந்தன. வரலாற்று பின்னணியில் அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இரு பாகங்களாக இந்த படம் உருவாகி உள்ளது. கங்குவா கேரக்டரில் நடிகர் சூர்யாவும் அனிமல் படத்தில் நடித்து பிரபலமான பாபி தியோல் உதிரன் எனும் பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் சர்ப்ரைஸ் கதாபாத்திரம் ஒன்றும் படத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இது நடிகர் கார்த்தியாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கங்குவா படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஐமேக்ஸ் மற்றும் 3d அம்சத்தில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தார்.
பத்தாம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் 11-ம் தேதியான வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை, 12ஆம் தேதி விஜயதசமி, அதற்கு அடுத்த நாள் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை இருக்கிறது. இதன் காரணமாக படத்தை ரிலீஸ் செய்யலாம் என பட குழு திட்டமிட்டு அறிவித்தது. படம் தொடர்பாக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் ஞானவேல் ராஜா கங்குவா படத்துடன் யாரும் போட்டி போடக்கூடாது. அப்படியே போட்டி போட்டாலும் முதல் பாகத்தின் வெற்றியை பார்த்து இரண்டாம் பாகத்தை யாரும் எதிர்த்து ரிலீஸ் செய்ய மாட்டார்கள்" என பேசி இருந்தார்.
இது இணையதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக உருவெடுத்தது. ஞானவேல் ராஜாவும் சிறுத்தை சிவாவும் கர்வத்தில் பேசி வருவதாக ரசிகர்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 170 ஆவது திரைப்படமான வேட்டையன் அதே தேதியில் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஜெய் பீம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பதும், தொடர்ந்து நான்காவது படமாக ரஜினியின் படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சனும் இணைந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மஞ்சு வாரியர், பகத்ஃபாஸில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இணைந்திருக்கின்றனர். இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில்
பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இதை அடுத்து சமூக வலைதளங்களில் கங்குவா-வா வேட்டையனா என இரு நடிகர்களின் ரசிகர்களிடையே கடும் போட்டி இருந்தது. காலை ஆரம்பித்து நள்ளிரவு வரை இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு சண்டை செய்து வந்தனர். இந்த நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலீஸ் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருப்பது உண்மைதான் எனவும், அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஞானவேல் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. சூர்யா நடித்து வெற்றி பெற்ற படங்கள் ஓடிடியில் மட்டும் தான் வெளியானது. கடைசியாக அவர் நடித்திருந்த ’எதற்கும் துணிந்தவன்’ படம் 2022-ல் வெளியான நிலையில் அந்த படம் தோல்வி படமாகவே கருதப்படுகிறது. அதற்குப் பிறகு சிறப்பு தோற்றங்களில் மட்டுமே சூர்யா நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருக்கும் கங்குவா படத்தை சூர்யாவின் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை அடுத்து ஞானவேல் ராஜாவுக்கு எதிராக திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. படத்தை எடுத்து சொன்ன தேதியில் வெளியிட திரணியும், தைரியமும் இருந்தால் மட்டும் படத்தை தயாரிங்க.. உங்க தயாரிப்பு நிறுவனத்தை வைத்து என்ன வேனா பண்ணுங்க.. எங்க அண்ணன விட்டுருங்க" என சூர்யாவின் போர்ப்படை வீரர்கள் - திண்டுக்கல்" என்ற பெயரில் அந்த போஸ்டர்கள் திண்டுக்கல் நகரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன/ தற்போது இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications