சொந்த கட்சினு கூட பார்க்கல.. மஜக பொதுச்செயலாளர் பதவியில் தமிமுன் அன்சாரி அதிரடி நீக்கம்!என்னாச்சு?

மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தமிமுன் அன்சாரி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியை துவக்கினார்.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த அக்கட்சியின் மாநில பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்னணி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியில் தமிமுன் அன்சாரி செயல்பட்டு வந்தார். கடந்த 2016ல் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து தமிமுன் அன்சாரி தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியை தொடங்கினார்.

அதன்படி உருவானது தான் மனிதநேய ஜனநாயக கட்சி. இந்த கட்சியின் பொதுச்செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டு வந்தார்.

பொதுச்செயலாளர் பதவியில் நீக்கம்

பொதுச்செயலாளர் பதவியில் நீக்கம்

இந்நிலையில் தான் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த அக்கட்சியின் மாநில பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

மேலும் இதன் பின்னணியில் உள்ள தகவல்களும் வெளியாகி உள்ளன. கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் நோக்கத்தின் தன்னிச்சையாக அவர் நடந்து கொண்டதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளார் தமிமுன் அன்சாரி. புதிய பொதுச்செயலாளராக ஹாருன் ரஷீத் என்பவர் நியமித்துள்ளது மனிதநேய ஜனநாயக கட்சி.

2016ல் புதிய கட்சி

2016ல் புதிய கட்சி

முன்னதாக ஜவாஹிருல்லா தலைமையில் இயங்கும் மனிதநேய மக்கள் கட்சியில் முக்கிய பதவியில் தமிமுன் அன்சாரி இருந்தார். அப்போது அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். கட்சி தனிஅணியாக செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டார். அதன்பிறகு தமிமுன் அன்சாரி 2016ல் மனிதநேய ஜனநாயக கட்சியை துவங்கினார்.

 எம்எல்ஏவாக்கிய ஜெயலலிதா

எம்எல்ஏவாக்கிய ஜெயலலிதா

மேலும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவரது கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி தமிமுன் அன்சாரியை எம்எல்ஏ ஆக்கினார். இந்நிலையில் தான் தமிமுன் அன்சாரியே தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது மனிதநேய ஜனநாய கட்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+