ஸ்லீப்பர் செல்கள்.. பாஜகவுக்கு வரப்போகிறார்கள்.. திமுகவுக்கு அதிர்ச்சி தந்த வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம் திமுக எம்பி ஆ ராசாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
திண்டுக்கல்: தமிழகத்திலும் ஏக்நாத்ஷிண்டே குழு போல் உருவாக வாய்ப்புள்ளது என்றும், திமுகவின் சிலீப்பர் செல்கள் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாகவும், வேலூர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாஜக தேசிய சிறுபான்மைபிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசினார்..
அப்போது தமிழகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனைகள் குறித்து அவரிடம் பல கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு இப்ராஹிம் தந்த பதில்கள்தான் இவை:

ரவுடியிசம்
"தென்மாநிலங்களில் 2024-2026-ல் நடக்கும் எம்பி, எம்எல்ஏ தேர்தலில் பாஜக ஆளுங்கட்சியாக வரும்.. இதற்கு முன்னோட்டமாக கிராமங்களை நோக்கி தாமரை பிரச்சாரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுக தி.ஆட்சிக்கு வந்த பிறகு ரவுடியிசம் தலைதூக்கி உள்ளது. சென்னையில் கூலிப்படையினரால் சட்டம்-ஒழுங்கு பாதித்து கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது... இதனை தட்டிகேட்கவேண்டிய தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன..

ஸ்லீப்பர் செல்கள்
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு லாக்கப் மரணங்களை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். ஆனால் இந்த ஒன்றரை வருடங்களில் ஆண்டுகளில் 6 லாக்கப் மரணங்கள் நடந்திருக்கின்றன.. இதைப்பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காத்து வருகிறாரே ஏன்? 6 மரணங்கள் நடந்துள்ளது பற்றி கண்டுகொள்ளாதது கவலை அளிக்கிறது. மராட்டியத்தில் சிவசேனா கட்சிக்குள் ஏற்கனவே பிளவு ஏற்பட்டுள்ளது.. தற்போது பாஜக ஆதரவில் ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது..

நயினார் நாகேந்திரன்
பிரித்தாள்வது என்பது எங்கள் நோக்கமல்ல.. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதில் எம்எல்ஏக்கள் சிலருக்கு விருப்பமில்லை.. இங்கும் ஏக்நாத்ஷிண்டே குழு போல் உருவாக வாய்ப்புள்ளது... திமுகவின் சிலிப்பர் செல்கள் பாஜகவில் சேர வாய்ப்புள்ளது... தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கம் எங்களிடம் கிடையாது. நயினார் நாகேந்திரன் சொன்னது, அவரது தனிப்பட்ட கருத்தாகும்...

ஆ. ராசா
மத்தியஅரசு அக்னிபாத் திட்டத்தை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கொண்டுவந்துள்ளது... இதில் மதம் பற்றி பேசுவதற்கு இடமே இல்லை. பாஜகவில் அடுத்த இலக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றுவதுதான்.. அதிமுக உட்கட்சி பிரச்சினையில் பாஜக தலையிடாது.. திமுகவின் ஆ.ராசா தனித்தமிழ்நாடு பற்றி இனியும் பேசினால், பாஜக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது.. தக்க பதிலடி கொடுக்கும்" என்றார் வேலூர் இப்ராஹிம்.. ஆ.ராசாவின் தனித்தமிழ்நாடு குறித்த பேச்சுக்கு தொடர்ந்து பாஜக எதிர்வினையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து!












Click it and Unblock the Notifications