திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஓவர் நெருக்கம்".. ஒரே நாளில், ஒரே மாதிரி பகீர்.. பார்சல் வேற.. பதறிய பெற்றோர்.. திகைத்த திண்டுக்கல்

பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் தீபாவளிக்கு முந்தைய நாள் காணாமல் போயுள்ளனர்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: நெருங்கி பழகிய 2 மாணவிகள் திடீரென ஒரே நாளில் ஒன்றாக காணாமல் போயுள்ள சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ளது பட்டிவீரன்பட்டி அருகே உள்ள காந்திபுரம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் செல்வ ஹர்ஷனா..

17 வயதாகிறது.. பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டை பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஞானதர்ஷினி என்பவர் ஹர்ஷனாவின் தோழி ஆவார்.

பொது இடத்தில் தாக்குதல்! மாணவி தற்கொலை... உத்தரப் பிரதேசத்தில் பதற்றம் பொது இடத்தில் தாக்குதல்! மாணவி தற்கொலை... உத்தரப் பிரதேசத்தில் பதற்றம்

நெருக்கம்

நெருக்கம்

இவருக்கும் 17 வயதாகிறது.. இருவருமே நெருங்கி பழகிவந்துள்ளனர்.. இருவரும் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, இவர்கள் 2 பேரும் வீட்டிலிருந்து டியூஷனுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளனர்.. ஆனால், இருவருமே வீடு திரும்பவில்லை.. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், இரண்டு வீடுகளிலுமே பெற்றோர்கள் பதறிவிட்டனர்..

ஷாக்கிங்

ஷாக்கிங்

அதனால் நேரடியாகவே டியூஷனுக்கு சென்று பார்த்தனர்.. ஆனால், அவர்கள் 2 பேருமே அன்றைய தினம் டீயூசனுக்கு போகவில்லை என்பது தெரிய வந்தது.. இதனால் குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சியாகினர். அப்போதுதான் 2 பேரின் ஸ்கூல் பைகளும் வீட்டிலேயே இருந்ததை கண்டறிந்தனர்.. வீட்டை விட்டு கிளம்பி செல்லும்போது, தீபாவளிக்கு வாங்கிய புது டிரஸ்ஸை மட்டும், பேக்கில் வைத்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது... இதில் மாணவி செல்வ ஹர்ஷனா தன்னுடைய வீட்டில் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார்..

மன்னிச்சிடுங்க

மன்னிச்சிடுங்க

அந்த கடிதத்தில் "அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள், என்னைத் தேட வேண்டாம்" என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வ ஹர்ஷனாவின் அம்மா, முத்துலட்சுமி, பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தேடி வருகின்றனர்.

மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையின் போது, டிரஸ்ஸை மட்டும் இவர்கள் எடுத்துக் கொண்டு மாயமான விவரம் தெரியவில்லை.... ஒருவேளை பண்டிகையை கொண்டாட போயிருப்பார்களா? அல்லது வேறு எங்காவது சென்றிருப்பார்களா? என்ற பதற்றம் இரு குடும்பத்தினரிடம் ஏற்படுத்தி உள்ளது..!!

English summary
Where did the plus 2 students go and what happened near Dindigul Where did the plus 2 students go and what happened near Dindigul
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X