திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி.. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்!
திண்டுக்கல் : பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கணவனை இழந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்ததால், அப்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து உடனடியாக அந்தப் பெண் அவரது உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டி, பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பா.ஜ.க நிர்வாகி மீது அப்பெண்ணின் குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.

கணவரை இழந்த பெண்
திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைப்பட்டி, பெரியாண்டவர் நகரை சேர்ந்தவர் மனிஷா (25). மனிஷா சட்டம் பயின்றவர். இவரது கணவர் குமரேசன். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். குமரேசன் கடந்த 2018ல் கொலை செய்யப்பட்டார். மனிஷா தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் வசித்து வருகிறார்.

பாஜக பிரமுகர்
திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், மனிஷாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து உதவிகள் செய்வதாக கூறிச் சென்றுள்ளார். தான் குமரேசனின் சகோதரனைப் போல எனக் கூறி மனிஷாவிடம் பேசி வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார் மனிஷா.

வற்புறுத்திய தினேஷ்
ஆனாலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனிஷாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக தினேஷ் குமார் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி காவல் நிலையத்தில் மனிஷாவின் குடும்பத்தினர் மீது பொய் புகார் அளித்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி
தொடர்ந்து தினேஷ் குமார் மன உளைச்சல் அளித்து வந்ததால் மனமுடைந்த மனிஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிக் கிடந்த மனிஷாவை அவரது உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மனிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாஜக நிர்வாகி மீது புகார்
திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பாஜக பிரமுகர் தினேஷ்குமார் தன்னை கட்டாயப்படுத்தியதாலும் பொய் புகார் கொடுத்து மிரட்டியதாலும்தான் மனிஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என மனிஷாவின் சகோதரி சீமாதேவி தினேஷ்குமார் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications