பழனிக்கு வந்த பன்றி காய்ச்சல்! கூடவே கொரோனாவும்! அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி செய்தி!
திண்டுக்கல் : அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொரோனா, குரங்கு அம்மை போன்ற பாதிப்புகளால் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் வயநாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் பன்றிக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதை அடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. எல்லைகளில் கேரள வாகனங்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தமிழகம் வர அனுமதிக்கப்படுகிறது.

பன்றி காய்ச்சல்
இந்நிலையில் அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தி சிகிச்சையளித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பழனியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்காவிற்கு சென்று உள்ளார்.

அமெரிக்க பயணம்
அமெரிக்காவில் பணி புரியும் தனது கணவருடன் சில காலம் இருந்துவிட்டு கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார். பழனிக்கு வந்த அந்தப் பெண் தஞ்சாவூரில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல விழாவிற்கு சென்று வந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் நான்கு தினங்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் பழனியில் உள்ள தனது வீட்டிற்கு உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு கொரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணை பழனி சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அமெரிக்கா சென்று வந்த பெண்ணிற்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீவிர கண்காணிப்பு
தற்போது கேரள மாநிலத்தில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது பன்றிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழனிக்கு கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வரும் நிலையில் அவர்கள் மூலம் பன்றிக்காய்ச்சல் பரவியதா அல்லது அமெரிக்கா சென்ற போது பன்றிக்காய்ச்சல் பரவியதா எனவும், அவர் வசிக்கும் பகுதிகளில் வேறு யாருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்போ அல்லது அறிகுறிகளோ இருக்கிறதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications