மிஸ்டு கால்..மிஸ்ஸான வாழ்க்கை! நடுக்காட்டில் எல்லாம் ஓவர்..காலையில் கார்த்தி எஸ்கேப்! கவனம் பெண்களே!
திண்டுக்கல் : செல்போனில் பலவிதமான விபரீத ஆபத்துகள் நடந்து வரும் நிலையில் திண்டுக்கல் அருகே மிஸ்டுகால் மூலம் அறிமுகம் ஆன நபருடன் இளம்பெண்ணை நடுக்காட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை நள்ளிரவில் காட்டுக்குள்ளேயே விட்டுச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ரேகை போல செல்போன் மாறிவிட்டது. எந்நேரமும் செல்போனிலேயே உலாவி கிடக்கின்றனர் மாணவர்கள்.
ஒருபுறம் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அரிய தகவல்கள், ஆன்லைன் வகுப்பு என செல்போன்கள் பயனுள்ளதாக இருந்தாலும் மறுபுறம் இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃப்ரீ பையர் என கேம்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

அதிர்ச்சி சம்பவம்
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு பிரபலமாக துடிக்கும் இளம் பெண்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதினர் தான் இப்படியென்றால் பல வயது வந்த பெண்கள் கூட இப்படியான குற்றங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். மிஸ்டுகால் மூலம் அறிமுகம் ஆன நபருடன் ஆன இளம்பெண்ணை நடுக்காட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை நள்ளிரவில் காட்டுக்குள்ளேயே விட்டுச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மிஸ்டு கால் பழக்கம்
அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள முத்துகோவில்பட்டியை சேர்ந்த கிழவன்அம்பலம் மகன் கார்த்திக்(31). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் உள்ளார். இந்நிலையில் நத்தம் குட்டுப்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் மிஸ்டுகால் மூலம் பழக்கம் ஏற்பட்டது. திருப்பூரில் வேலைபார்த்து வந்த அவர் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.

செல்போனில் காதல்
அதன்பிறகு கார்த்திக்குடன் ஏற்பட்ட பழக்கத்தால் செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். தனக்கு திருமணமானதை மறைத்து கார்த்திக் அவருடன் பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனிமையில் சந்திக்க வேண்டும் எனக்கூறி கடந்த 9-ந்தேதி தனது காதலியை கோபால்பட்டிக்கு அழைத்து வந்தார். கண்டிப்பாக நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்குறுதி அளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

போலீசில் புகார்
இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது கார்த்திக்கை காணவில்லை. தான் எங்கே இருக்கிறோம் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. அதன்பிறகு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரிடம் விசாரித்தபோது தனக்கு நடந்தவற்றை கூறி அவர் கதறி அழுதார். பின்னர் அவரது பெற்றோரை வரவழைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இளைஞர் கைது
பின்னர் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றிய கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்போனில் பலவிதமான விபரீத ஆபத்துகள் நடந்து வரும் நிலையில் மிஸ்டுகால் மூலம் அறிமுகம் இல்லாத நபரிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது. இளம்பெண்கள் செல்போனை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களிலும், செல்போன்களில் தொடர்ந்து பேசும் வீட்டில் இருப்பவர்கள் கண்காணிக்க வேண்டுமெனவும் போலீசார் பெற்றோர்களை எச்சரித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications