தொகுதிகளை மாற்றிப் போட்ட தலைமை.. ‘அதிரடி கணக்கு’.. இப்படி ஆகிப்போச்சே.. புலம்பும் மா.செ ஆதரவாளர்கள்!
தென்காசி : தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக சீரமைக்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்த கடையநல்லூர் தொகுதியை தெற்கிலும், மற்றும் தெற்கு மாவட்டத்தில் இருந்த சங்கரன்கோவில் தொகுதியை வடக்கு மாவட்டத்திலும் சேர்த்து திமுக தலைமை அறிவித்துள்ளது.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிப்பதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனால், மாவட்ட செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்த சிட்டிங் மா.செ செல்லதுரை மற்றும் எம்.பி தனுஷ் குமார் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள்
திமுகவின் 72 கழக மாவட்டங்களில் தென்காசி வடக்கு தவிர்த்து 71 மாவட்டங்களுக்கான மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் திமுக தலைமைக் கழகத்தால் கடந்த மாதமே வெளியிடப்பட்டது. வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் இன்னும் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் செல்லதுரைக்கு பதிலாக, திமுக எம்.பியான தனுஷ் குமாருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தர உள்ளதாக தகவல் பரவியதால், செல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னை அறிவாலயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுத்தி வைப்பு
இதற்கிடையே தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஜய அமுதா என்பவர் திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் தென்காசி வடக்கு நிர்வாகிகள் அறிவிப்பை நிறுத்தி வைத்தது திமுக தலைமை. இந்நிலையில், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தென்காசி வடக்கு
அதனை உறுதி செய்யும் வகையில் இன்றைய முரசொலி நாளிதழில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், சங்கரன்கோவில் (3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலித நல்லூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர் ஒன்றியங்கள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி தெற்கு
அதனை உறுதி செய்யும் வகையில் இன்றைய முரசொலி நாளிதழில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், சங்கரன்கோவில் (3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலித நல்லூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர் ஒன்றியங்களில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாவுக்காக மாற்றம்
முன்னர், தென்காசி தெற்கு மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏவான ராஜாவை தற்போது தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்க இருப்பதால், தென்காசி மாவட்ட திமுகவில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்காகவே சங்கரன்கோவில் தொகுதியை வடக்கிற்கு மாற்றியுள்ளனர்.

புலம்பும் சிட்டிங் மா.செ ஆதரவாளர்கள்
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்காக சிட்டிங் மா.செ செல்லதுரையும், எம்.பி தனுஷ் குமாரும் போட்டி போட்டுக் கொண்டிருந்த சூழலில், சங்கரன்கோவில் தொகுதியை வடக்கிற்கு மாற்றி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏவையே மாவட்ட செயலாளராக நியமிக்க தலைமை கணக்குப் போட்டிருப்பதைப் பார்த்து செல்லதுரை, தனுஷ் குமாரின் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனராம்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications