அவரா? செல்லாக்காசுங்க.. பேசவே தேவையில்லை! அண்ணாமலையை விமர்சித்த பொன்முடி! அதிமுக இன்னுமா இருக்கு?

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை : போலீஸ் வேடம் போட்டுக் கொண்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அரசியலுக்கு வந்து ஏதேதோ பேசுகிறார், அவர் என்றுமே செல்லாக்காசு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து திமுக மற்றும் தமிழக அரசின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து மாவு கொள்முதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்த போதிலும் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு பேருந்து நிலையத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிட மாடல் ஆட்சி

திராவிட மாடல் ஆட்சி

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் , நாகை வடக்கு மாவட்ட பெறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அவர் பேசுகையில் உயர் கல்வியில் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை திராவிட மாடல் ஆட்சி வழங்கியுள்ளது.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

போலீஸ் வேடம் போட்டுக்கொண்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அரசியலுக்கு வந்து ஏதேதோ செய்து வருகிறார். சமூக நீதி மற்றும் மதக் கொள்கைகள் பற்றி எதுவும் அவருக்கு தெரியாது . மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் ஏதேனும் உதவி கிடைக்காதா என பேசுகிறார். இது ஒருபுறமிருக்க மற்றொரு கட்சி ஒன்று இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை. ஒபிஸ்சா அல்லது இபிஎஸ்சா என அங்கு போட்டி போட்டுக்கொண்டு உள்ளனர்

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

நிகழ்ச்சியின் இறுதியில் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+