முகேஷ் அம்பானி குடும்பம் இந்தியாவை விட்டு லண்டனில் குடிபெயர்கிறதா? பரவிய செய்தி: ரிலையன்ஸ் மறுப்பு
மும்பை: ஸ்டோக் பார்க் தோட்டத்தை ரூ. 592 கோடி செலவில், வாங்கிய நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை ரிலையன்ஸ் குழுமம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆண்டிலியாவில் உள்ள 400,000 சதுர அடி பிரமாண்ட பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அம்பானி குடும்பம்
இந்த நிலையில், அம்பானி குடும்பம் பக்கிங்ஹாம்ஷயர், ஸ்டோக் பார்க்கில் உள்ள 300 ஏக்கர் கன்ட்ரி கிளப்பை அவர்களின் வீடாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சில செய்தி தகவல்கள் கசிந்தன. அம்பானி குடும்பம் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் வசிக்கப்போவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து சமூக ஊடகங்களில் அது தொடர்பான ஊகங்கள் சுற்றி வந்தன.

ரிலையன்ஸ் மறுப்பு
இந்த நிலையில்தான், ரிலையன்ஸ் குழுமம் இன்று வெளியிட்ட அறிக்கையில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் "லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை" என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு ரிசார்ட்
ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், நிறுவனம் கையகப்படுத்திய நோக்கம், கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதுதான், என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வணிகத்தை கருத்தில் கொண்டு, இந்த சொத்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பல் துறையை, உலகளவில் விரிவுபடுத்தும் திட்டம்தான் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணங்கள்
அதேநேரம், அம்பானி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 592 கோடி ரூபாய்க்கு லண்டன் சொத்தை ரிலையன்ஸ் வாங்கிய பிறகு, அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதால், இதுபோன்ற யூகங்கள் றெக்கை கட்டி பறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.