துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்கை" மட்டும் இல்லைனா என்ன ஆகும்? ஹாங்காங் மேட்சில் இந்தியா கற்ற 4 பாடங்கள்.. காத்திருக்கும் சிக்கல்

Google Oneindia Tamil News

துபாய்: நேற்று ஹாங்காங் அணிக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இருந்தாலும்.. இந்திய அணியின் 4 வீக்னஸ்கள் நேற்று பட்டவர்த்தனமாக வெளியே தெரிந்தது.

ஆசிய கோப்பை 2022 தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற இந்திய அணி நேற்று நடந்த ஹாங்காங் போட்டியிலும் வெற்றிபெற்றது.

2022 ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் அணியாக ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 பிரிவிற்கு முன்னேறி உள்ளது. இன்னொரு பக்கம் முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தி உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை 2022 தொடர் ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி ஓவர் வரை திக் திக் என்று திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் பாண்டியாவின் கூல் பினிஷிங் காரணமாக இந்தியா வெற்றியை வசப்படுத்தியது.

ஹாங்காங்

ஹாங்காங்

இந்த நிலையில் நேற்று நடந்த ஹாங்காங் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஹாங்காங் அணிக்கு அதிக இலக்கை நிர்ணயம் செய்ய முடியும் என்பதால் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. பிட்ச் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும் என்றாலும், எதிரணி ஹாங்காங் என்பதால் இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் ரிஸ்க்கை எடுத்து. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 192-2 ரன்களை எடுத்தது.

வெற்றி

வெற்றி

அதன்பின் களமிறங்கிய ஹாங்காங் அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே ஆடியது. அதிலும் ஹாங்காங் டாப் ஆர்டர் வீரர்கள் நன்றாகவே பேட்டிங் செய்தனர். சேசஷன் அலி, பாபர் ஹயாத் ஆகியோர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதனால் 152-5 ரன்கள் வரை ஹாங்காங் அணி எடுத்தது. இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்றாலும், இந்த வெற்றி ஒன்றும் அத்தனை சிறப்பான வெற்றி கிடையாது என்றுதான் கூற வேண்டும். இந்திய அணி 5 முக்கியமான பாடங்களை நேற்று இந்த போட்டிக்கு பின் கற்றது.

 பாடம் 1

பாடம் 1

நேற்று இந்திய அணியின் முக்கியமான வீக்னஸ் ஒன்று வெளிப்பட்டது. அது துபாய் போன்ற பிட்சுகளில் இந்திய அணியின் டிபன்ஸ் சிறப்பாக இல்லை. எப்படியாவது இரண்டாவது பவுலிங் செய்த பாகிஸ்தான் அணியால் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்ய முடியவில்லையோ அதேபோல்தான் இந்திய அணியாலும் ஹாங்காங்கிற்கு எதிராக டிபன்ஸ் செய்யும் போது சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. பனி படர்ந்த துபாய் பிட்சில் இந்திய அணி டிபன்ஸ் செய்ய திணறுகிறது. எப்போதும் டாஸ் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்திய அணி உடனே இதற்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் அடுத்து வரும் சூப்பர் 4 ஆட்டங்களில் இந்திய அணிக்கே சிக்கல் ஏற்படும்.

பாடம் 2

பாடம் 2

இந்திய அணியின் பவுலிங்கில் உள்ள பிரச்சனைகள் நேற்று வெளியே தெரிந்தன. ஹர்திக் பாண்டியா இல்லை என்றதும் இந்திய அணியின் பவுலிங் சிக்கல்கள் பட்டவர்த்தனமாக வெளியே தெரிந்தது. நேற்று ஆவேஷ் கான் 13.20 எக்கனாமி பவுலிங் செய்தார். அதோடு 53 ரன்கள் கொடுத்தார். முதல் போட்டியிலும் இவர் அதிக ரன்களை கொடுத்தார். அதேபோல் நேற்று சாஹாலும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பெரிய தொடர்களில் தொடர்ந்து விக்கெட் எடுக்காமல் சாஹல் ஏமாற்றி வருகிறார். நேற்று இருவரின் வீக்னஸும் அப்படியே வெளியே தெரிந்தது.

பாடம் 3

பாடம் 3

நேற்று பேட்டிங்கும் இந்திய அணிக்கு சிறப்பாக இல்லை. ரோஹித் பால்ஸ் ஷாட் அடித்து அவுட்டானார். ஆனால் கே. எல் ராகுல் மிக மோசமாக ஆடினார். அவரின் ஸ்டிரைக் ரேட் 100க்கும் கீழ் இருந்தது. ஹாங்காங் போன்ற அணிக்கு எதிராக டி 20 போட்டி ஒன்றில் இப்படி ஆடும் அளவிற்குத்தான் அவரின் இவரின் பேட்டிங் இருக்கிறது. இதனால் அடுத்தடுத்து போட்டிகளில் பார்மில் இல்லாத கே. எல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலாக பண்டை ஓப்பனிங் இறக்கி சோதிக்கலாம்.

 பாடம் 4

பாடம் 4

இன்னொரு பக்கம் நேற்று ரோஹித் கேப்டன்சியும் ஏனோ அவ்வளவு சிறப்பாக இல்லை. அவரின் பவுலிங் ரொட்டேஷன் அவ்வளவு சிறப்பாக இல்லை. நேற்று சூர்யா குமார் யாதவ் மட்டும் கடைசி ஓவரில் 26 ரன்கள் அடிக்கவில்லை என்றால் ஹாங்காங் வெற்றி கூட பெற்று இருக்கும். அந்த அளவிற்கு இந்தியா "தேமே" என்று ஆடியது. ஹாங்காங் தானே என்பதால் இப்படி ஆடியதா? இல்லை உண்மையில் இந்திய அணியிடம் சிக்கல்கள் இருக்கிறதா என்பது போக போக தெரியும்.

English summary
Asia Cup 2002 Ind vs Hon: How did India win against Hong Kong? What are the 4 lessons to learn?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X