20 நிமிடத்தில் 7 வெடிச்சத்தங்கள்.. பற்றி எரியும் துபாய் ஜெபல் அலி கிடங்கு.. உச்சக்கட்ட பதற்றம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அமீரகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக மையமான துபாயின் ஜெபல் அலி தொழிற்பகுதியில் அதிகாலை அடுத்தடுத்து பல வெடிச்சத்தங்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மத்திய கிழக்கில் அமைதி திரும்பி வருவதாக உலக நாடுகள் நம்பிய நிலையில், இந்த தாக்குதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வளைகுடாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் நேரடி தாக்குதலை நிறுத்திவிட்ட போதிலும் இன்னும் அங்கு பதற்றம் குறையவில்லை. குறிப்பாக ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள், இதர வளைகுடா நாடுகள் மீது அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில் தான் அமீரகத்தில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.

Dubai UAE Middle east

அமீரகம் மீது தாக்குதல்

ஐக்கிய அமீரகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக மையமான துபாயின் ஜெபல் அலி தொழிற்பகுதியில் இன்று அதிகாலை தாக்குதல் நடந்துள்ளது. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியை ஈரானின் மெர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

20 நிமிடங்களில் 7 தாக்குதல்

வெறும் சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது 7 வெடி சத்தங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தாக்குதலால் ஏற்பட்ட வெடி சத்தங்களா இல்லை விபத்துகளா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அமீரகம் இதில் மவுனம் சாதித்தே வருகிறது. ஜெபல் அலி துறைமுகம் மற்றும் அதை ஒட்டியுள்ள தொழிற்பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதி எரிபொருள் சேமிப்பு, சர்வதேச சரக்கு கையாளுதலுக்கான முக்கிய மையமாக விளங்குகிறது.

இந்த சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அமீரகம் அதிகாரப்பூர்வ தகவலை பகிராமல் மவுனமாகவே இருந்து வருகிறது. இதனால் தாக்குதலால் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை.

பகீர் வீடியோ

வெடிப்பு மற்றும் தீ விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதற்கிடையே இந்த தாக்குதலை வீடியோ எடுத்ததாக கூறி இருவரை எமிரேட்ஸ் அதிகாரிகள் காவலில் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பும் கூட ஈரான் தாக்குதலை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் மீது அமீரகம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதலே இந்த வெடிப்புகளுக்கு காரணம் என ஈரானின் மெர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அமீரக ஊடகங்கள் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்தி வெளியிட்டாலும், அது தாக்குதலால் ஏற்பட்ட வெடிச்சத்தங்களா அல்லது வேறு எதாவது காரணமாக என்பது குறித்தோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

மோசமான தீ விபத்து

நாசாவின் Thermal Imagery போட்டோக்களிலும் கூட ஜெபல் அலி துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு பகுதியில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அந்த பகுதி எரிபொருள் சேமிப்பு மையமாக பயன்படுத்தப்படுவதால் தீ விபத்து பெரிதாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஜெபல் அலி தொழிற்பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றனர். இதுபோல பல்வேறு தகவல்கள் பரவினாலும் அமீரகம் இதை மறுக்கவும் இல்லை. உறுதி செய்யவும் இல்லை.

ஏமனிலும் தாக்குதல்

மறுபுறம் ஏமன் தலைநகர் சனாவிலும் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சில தகவல்களில் அவை வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் அது உள்நாட்டு மோதலால் ஏற்பட்ட தாக்குதல் என சொல்கிறது. இதனால் சம்பவத்தின் உண்மை நிலை குறித்து குழப்பம் நீடிக்கிறது.

அமெரிக்கா - ஈரான் இடையே இப்போது தாக்குதல் இல்லை. அதேநேரம் பதற்றம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இதனால் வளைகுடா நாடுகள் ஹை அலர்ட் மோடில் தான் உள்ளன. இந்த நிலையில் துபாயில் ஏற்பட்டுள்ள மர்ம வெடிப்புகள் அப்பகுதியின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+