துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சபாஷ் மோனா".. முதல்முறையாக.. மெக்கா பாதுகாப்பு பணியில் பெண் ராணுவத்தினர்.. சவுதியில் அடுத்த அதிரடி

மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் பணியமர்த்தப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

துபாய்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்... அந்த வகையில், மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் மோனா என்ற இளம்பெண்.

இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமானது சவுதி அரேபியா.. இந்த அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான்..

இவர் சமீப காலமாகவே நிறைய மாற்றங்களை தன் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.. நிறைய சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தி கொண்டு வருகிறார்..

தங்க தமிழ்ச்செல்வனுக்கு மா.செ பதவி தரப்படாதது ஏன்.. தேனியை வலம் வரும் கேள்வி! தங்க தமிழ்ச்செல்வனுக்கு மா.செ பதவி தரப்படாதது ஏன்.. தேனியை வலம் வரும் கேள்வி!

முதலீடு

முதலீடு

அதாவது பழமைவாதத்தில் இருந்து விடுபடுவதன் மூலம், சர்வதேச முதலீட்டை வெகுவாக ஈர்க்கலாம் என்று சல்மான் திடமாக நம்புகிறார்.. இதற்காகவே விஷன் 2030 என்ற பெயரில் சில அதிரடிகளை கையில் எடுத்துள்ளார்.. அந்த வகையில், பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, ராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்துள்ளார்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

இப்போது, இந்த வரிசையில் இன்னொரு அதிரடியும் சேருகிறது.. புனித தலமான மெக்கா மதினாவில் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.. அதன்படி, கடந்த ஏப்ரலில் சவுதி ராணுவத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்...

மோனா

மோனா

இதில், முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற அந்தஸ்த்தை மோனா என்ற இளம்பெண் பெறுகிறார்.. மோனா பணியிலும் இப்போது சேர்ந்துவிட்டார்.. ராணுவத்தினர் அணியும் காக்கி நிற யூனிபார்மைதான் மோனாவும் அணிந்திருந்தார்.. கருப்பு தொப்பி போட்டுள்ளார்.. மேல்சட்டை இடுப்பு அளவுக்கு நீளமாக இருந்தது.. கால்சட்டை கொஞ்சம் தளர்வாக இருந்தது.. முகத்தையும் மறைத்திந்தார் மோனா. பெண் வீராங்கனை பாதுகாப்பு பணியில் இப்படி ஈடுபடுவது அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது..

 புனிதம்

புனிதம்

இதை பற்றி மோனா சொல்லும்போது, "என் அப்பாதான் எனக்கு எல்லாமே.. அவரது பாதையில் செல்கிறேன்.. புனிதமான மெக்கா மசூதியில் பாதுகாப்பு பணியில் இன்னைக்கு ஈடுபட்டுள்ளேன்... புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி" என்று புளகாங்கிதத்துடன் சொல்கிறார்.

கம்பீரம்

கம்பீரம்

மோனோவை போலவே, இன்னொரு பெண் வீராங்கனை பெயர் சமர்.. இவர், காபா என்ற புனித இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.. ராணுவத்தில் சேர வேண்டும் என்று சமருக்கு ரொம்ப ஆசையாம்.. இப்போது இந்த பணி கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழச்சி என்று பெருமதித்துடன் தெரிவிக்கிறார். முதல் முறையாக, சவுதி பெண்கள் ஹஜ் போது மக்காவில் பாதுகாப்பாகவும் கம்பீரமாகவும் நின்று கொண்டிருப்பது மக்களை ஈர்த்து வருகிறது..!

English summary
First time in Saudi, women soldiers stand guard in Mecca during Haj
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X